ராகுல் காங்., தலைவராக தீர்மானம்; பொதுக்குழுவை புறக்கணித்தது சிதம்பரம் தரப்பு!

Updated : செப் 20, 2022 | Added : செப் 20, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
காங்கிரஸ் கட்சியில் மாநில அளவில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டுவது வழக்கம்.அனைத்து மாநிலங்களிலும் பொதுக்குழு நடத்தி, மாநில தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை, மேலிடத்திற்கு வழங்கும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அதன் அடிப்படையில், தமிழக காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம்,
ராகுல் காங்., தலைவர்,  தீர்மானம், பொதுக்குழு, சிதம்பரம், புறக்கணிப்பு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


காங்கிரஸ் கட்சியில் மாநில அளவில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டுவது வழக்கம்.அனைத்து மாநிலங்களிலும் பொதுக்குழு நடத்தி, மாநில தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை, மேலிடத்திற்கு வழங்கும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில், தமிழக காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம், சென்னையில் நேற்று மாநில தலைவர் அழகிரி தலைமையில் நடந்தது.தேர்தல் அதிகாரி கவுரவ் கோகோய் எம்.பி., குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா உட்பட, 654 பேர் பங்கேற்றனர்.'காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுலை தேர்வு செய்ய வேண்டும்' என, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


latest tamil news


மாநில தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்களை நியமனம் செய்யும் அதிகாரத்தை, கட்சி தலைமைக்கு வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில், ''ராகுலின் நடைபயணம் வெற்றி பெற்றுஉள்ளது,'' என்றார்.தங்கபாலு பேசுகையில், ''அழகிரி, அதிர்ஷ்டமான தலைவர். லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது.

ராகுல் பாதயாத்திரை வரலாற்றில் இடம்பெறும்,'' என்றார்.பொதுக்குழுக் கூட்டத்தில் எம்.பி.,க்கள் டாக்டர் செல்லகுமார், ஜோதிமணி, மாணிக்தாகூர் பங்கேற்கவில்லை.பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியலில், தங்களின் ஆதரவாளர்கள் இடம் பெறவில்லை என்ற அதிருப்தி காரணமாக, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அவரது மகனும் எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள், இக்கூட்டத்தை புறக்கணித்தனர்.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
20-செப்-202217:27:48 IST Report Abuse
sankaseshan தேய்ந்து போன கட்சிக்கு ஏன் இதனை built up கொடுக்கணும் கருமாதி மட்டும் தான் பாக்கி
Rate this:
Cancel
Anand - madurai,இந்தியா
20-செப்-202213:50:36 IST Report Abuse
Anand இந்தி கத்துக்கோங்க
Rate this:
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
20-செப்-202213:10:58 IST Report Abuse
மனிதன் கட்சி வளரணும்னு ஒருத்தனும் பாக்குறதில்ல, நம்ம வளரனும்,அதுக்கு நம்ம கோஷ்டி வளரனும்., இத மட்டுமே லட்சியமா வச்சுக்கிட்டு வாழறானுங்க... இவங்கள வச்சுக்கிட்டு ஒரு ஆணியும் புடுங்கமுடியாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X