தங்கவயல்செக்போஸ்ட்

Added : செப் 20, 2022 | |
Advertisement
இடப்பெயர்ச்சி நேரம்!மாவட்ட பொறுப்பு அமைச்சர் இட்டது தான் சட்டமுன்னு அவரது பவர் என்ன என்பதை தெரிவித்து வர்றாரு.இவருக்கு ஒத்துப் போகாத செங்கோட்டை முனி, 'காலம் பதில் சொல்லும்னு,ஒத்தை ஆளாக நின்று சப்தம் இல்லாமல் தனக்கென ஒரு ராஜாங்கத்தை ஏற்படுத்தி வராரு.அசெம்பிளி தேர்தலில் செங்கோட்டை முனி 'நான் யார், நீ யார், நாலும் தெரிந்தவர் யார், யார்னு' அடையாளம் காட்ட
தங்கவயல்செக்போஸ்ட்


இடப்பெயர்ச்சி நேரம்!மாவட்ட பொறுப்பு அமைச்சர் இட்டது தான் சட்டமுன்னு அவரது பவர் என்ன என்பதை தெரிவித்து வர்றாரு.இவருக்கு ஒத்துப் போகாத செங்கோட்டை முனி, 'காலம் பதில் சொல்லும்னு,ஒத்தை ஆளாக நின்று சப்தம் இல்லாமல் தனக்கென ஒரு ராஜாங்கத்தை ஏற்படுத்தி வராரு.அசெம்பிளி தேர்தலில் செங்கோட்டை முனி 'நான் யார், நீ யார், நாலும் தெரிந்தவர் யார், யார்னு' அடையாளம் காட்ட தயாராகி விட்டாராம்.கோல்டன் சிட்டி தொகுதி, பூ கட்சி முனியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக மேலிடம் வரை புரிய வெச்சிருக்கிறாரு. இதனால் 'மாஜி' அசெம்பிளிகாரர், மாவட்ட பொறுப்பு அமைச்சரை உடும்பு போல பிடித்திருக்கிறாரு.யாருக்கு சீட் என்ற முடிவில் தான் வெற்றி தோல்வி இருக்க போகுது. மனமுடைந்து கட்சி தாவும் நாடகத்துக்கு உள்ளுக்குள் ஒத்திகை நடந்து வருது. 'மேஜர்' சம்பவம் ஒன்று நடக்க போவது உறுதி.யார் வந்தாலும் அரவணைக்க புல்லுக்கட்டுகாரங்க வரவேற்க காத்திருக்காங்க.


ஒர்க் ஷாப் எங்கே?


முனிசி., யில் குப்பைகள் கொண்டு செல்ல பயன்பாட்டில் உள்ள ஆட்டோக்கள், டிராக்டர்கள்,ஜே.சி.பி., கார், வாட்டர் டேங்கர், லாரி, 'சக்கிங்' டிராக்டர்கள் என 50 வாகனங்கள் உள்ளன. இவைகளை பராமரிக்க 'ஒர்க் ஷாப்' ஒன்று இல்லை. அடிக்கடி 'ரிப்பேர்' என்ற பெயரில் முடக்கமாகி திறந்த வெளியில் நிறுத்தி மேலும் பாழாகிறதாம். வாகனங்களை பழுதுபார்க்க மெக்கானிக்குகளை பணியில் அமர்த்தணும்; ஒர்க் ஷாப் வேண்டுமென சபையில் வலியுறுத்தினாலும் அலட்சியமா இருக்காங்க.முனிசி., பெரிய ஆபீசரா வருகிறவர்கள், ஒரு சில மாதங்களிலேயே இடம் மாறி போயிடுறாங்க. எந்த ஒரு வேலையும் விறுவிறுப்பாக நடந்தபாடில்லை. அரைகுறை வேலையாக நிற்குது. பெயர் சொல்லும்படி பெரிய வேலை எதுவுமே நடந்ததாக தெரியலையே.சபையில் எடுக்கும் தீர்மானங்கள் தண்ணீர் மேல் எழுத்தாக உள்ளதே.


30 வருஷமா 'வெயிட்டிங்!'


மக்கள் மறந்தாலும்,மறுபடியும் நினைவுபடுத்தும் வேலையை பொறுப்பான அரசியல் தலைவர்களே ஞாபகப்படுத்துறாங்க. 30 வருஷமா குப்பம் -- மாரிகுப்பம் இணைப்பு ரயில் பாதை அமைக்கும் திட்டம் முடிந்தபாடில்லை. தாமதம் ஆவதற்கு கான்ட்ராக்டர் மீது குற்றம் சொன்னாங்க. ரயில் பாதை அமையும் இடம், சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமானதாக இருப்பதால், அதனை ரயில்வே துறை பெறுவதில் தான் தாமதம் என்றாங்க.இரு மாநில அரசுகளுக்கு உட்பட்டு இருப்பதால் அனுமதி பெறுவதில் தகராறு என சொன்னாங்க. எல்லா பிரச்னைகளும் முடிந்து போச்சு, விரைவில் ரயில்வே இணைப்பு பாதை பணி முடிவடைய போகுதென செங்கோட்டை முனி நம்பிக்கையோட சொல்லி இருக்காரு.30 வருஷமா இழுபறியில் இருந்த ரயில்வே பணி என்றோ ஒரு நாள் முடியும். அதற்கென காலக்கெடு எப்போது முடியும்னு தான் தெரியலை.


யார் வீட்டிற்கு போகுது குடிநீர்?


பேத்தமங்களாவில் உள்ள கோல்டன் சிட்டி குடிநீர் ஆலையில் இருந்து,தங்கமான நகருக்கு தினமும் எவ்வளவு தண்ணீர் தான் கிடைக்கிறது. அதை எங்கெங்கு எவ்வளவு சப்ளை செய்யப்படுகிறதென வெளிப்படையாகரா.பேட்டையில் உள்ள அலுவலகத்தில் தெரிவிக்கலாமே. மூடி மறைக்க இதிலென்ன ராணுவ ரகசியம் இருக்குதோ?பேத்தமங்களாவில் இருந்து பொன்னான நகருக்கு ஒரு சொட்டு நீரும் வருவதில்லையென நகர மக்களின் குமுறலாகும். ஆனால், அதிகாரிகளோ குடிநீர் சப்ளை செய்வதாகவே நம்ப சொல்றாங்க.பேத்தமங்களா ஏரியின் பாலாற்று சுத்திகரித்த நீர் யார், யார் வீட்டுக்கு மட்டும் சப்ளை ஆகிறதோ.குடிநீர் சப்ளை செய்வதில் பாரபட்சம் பார்க்கலாமா. கோல்டு மைன்சுக்காக உருவாக்கப்பட்ட பேத்தமங்களா குடிநீர் ஆலையை தலை முழுகணுமான்னு ஜனங்க கேள்விகேட்குறாங்களே.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X