தொழிற்சாலை வேலை வாய்ப்புவட மாநிலத்தவருக்கு அழைப்பு

Added : செப் 20, 2022 | |
Advertisement
கும்மிடிப்பூண்டி--கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகள் என, 350 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.தொழிற்சங்கம் மற்றும் தொழிற்சாலை விபத்தினால் ஏற்படும் பிரச்னை உள்ளிட்டவற்றை தவிர்க்கும் நோக்கில், பெரும்பாலான தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினர், உள்ளூர் மக்களுக்கு வேலை தருவதில்லை.அதனால், பீஹார், ஒடிசா, மேற்கு வங்கம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட
தொழிற்சாலை வேலை வாய்ப்புவட மாநிலத்தவருக்கு அழைப்பு



கும்மிடிப்பூண்டி--கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகள் என, 350 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.தொழிற்சங்கம் மற்றும் தொழிற்சாலை விபத்தினால் ஏற்படும் பிரச்னை உள்ளிட்டவற்றை தவிர்க்கும் நோக்கில், பெரும்பாலான தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினர், உள்ளூர் மக்களுக்கு வேலை தருவதில்லை.அதனால், பீஹார், ஒடிசா, மேற்கு வங்கம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை, வேலைக்கு வைத்துள்ளனர். அவர்களும் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.உற்பத்தி பாதிக்காமல் இருக்க, தினசரி தவறாமல் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் என்பதற்காக தொழிற்சாலை வளாகத்தில் அல்லது அதை ஒட்டியுள்ள வாடகை கட்டடத்தில் கூட்டமாக தங்க வைக்கப்படுகின்றனர்.வட மாநில தொழிலாளர்கள் இருந்தால், குறைந்த செலவில், எந்த பிரச்னையும் இன்றி தொழிற்சாலையை இயக்கலாம் என, தொழிற்சாலை நிர்வாகத்தினர் எண்ணுகின்றனர்.தற்போது, கும்மிடிப்பூண்டி பகுதியில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். மேலும், அவர்களின் தேவை அதிகரித்து வருவதால், வடமாநில தொழிலாளர்களுக்கு மட்டும் அழைப்பு விடும் வகையில், கும்மிடிப்பூண்டி முழுதும் இந்தி, ஆங்கில மொழியில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X