நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால்5000 மூட்டைகள் மழையில் நனையும் அபாயம்

Added : செப் 20, 2022 | |
Advertisement
திருத்தணி--திருத்தணி தாலுகா அருங்குளம், மாமண்டூர், லட்சுமாபுரம், நாபளூர், குன்னத்துார், கே.ஏ.கண்டிகை மற்றும் அதை சுற்றியுள்ள 10 கிராமங்களில் 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் பயிரிட்டு வருகின்றனர். இவர்கள் வசதிக்காக, நவரை பருவத்தின் போது, மாவட்ட நிர்வாகம் மாமண்டூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்தனர்.தற்போது, சம்பா
நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால்5000 மூட்டைகள் மழையில் நனையும் அபாயம்



திருத்தணி--திருத்தணி தாலுகா அருங்குளம், மாமண்டூர், லட்சுமாபுரம், நாபளூர், குன்னத்துார், கே.ஏ.கண்டிகை மற்றும் அதை சுற்றியுள்ள 10 கிராமங்களில் 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் பயிரிட்டு வருகின்றனர்.

இவர்கள் வசதிக்காக, நவரை பருவத்தின் போது, மாவட்ட நிர்வாகம் மாமண்டூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்தனர்.தற்போது, சம்பா பருவத்திலும், நெல் பயிரிட்ட விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மாமண்டூர் நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. இது குறித்து, மாமண்டூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:கடந்த பருவத்தில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையம் தற்போது திறக்காததால், 15 கி.மீ., துாரம் உள்ள பூனிமாங்காடு, 10 கி.மீ., துாரம் உள்ள பனப்பாக்கம் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது.அங்கு கொண்டு சென்றாலும், நான்கு அல்லது ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.நெல் மூட்டைகள் வைப்பதற்கு போதிய இட வசதியில்லாததால், 5,000 நெல் மூட்டைகள் வயல்வெளியில் கொட்டி வைத்துள்ளோம்.மழையால் நெல் நனைந்து சேதம் அடையும் நிலை உள்ளதால், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து மாமண்டூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X