ரவுடி வெட்டிக் கொலை: நான்கு பேர் கைது

Added : செப் 20, 2022 | |
Advertisement
திருவொற்றியூர்--எண்ணுார், வ.உ.சி., நகர், ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன், 32; ஆட்டோ ஓட்டுனர். இவர் மீது, கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர் மனைவி செந்தாமரை. ஒரு குழந்தை உள்ளது.நேற்று முன்தினம் நள்ளிரவு மனைவி, பிள்ளையுடன் வீட்டு வாசலில் துாங்கினார். அப்போது, ஏழு பேர் மர்ம கும்பல், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.ஜாகிர் உசேன் சம்பவ
ரவுடி வெட்டிக் கொலை: நான்கு பேர் கைது



திருவொற்றியூர்--எண்ணுார், வ.உ.சி., நகர், ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன், 32; ஆட்டோ ஓட்டுனர். இவர் மீது, கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர் மனைவி செந்தாமரை. ஒரு குழந்தை உள்ளது.நேற்று முன்தினம் நள்ளிரவு மனைவி, பிள்ளையுடன் வீட்டு வாசலில் துாங்கினார். அப்போது, ஏழு பேர் மர்ம கும்பல், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.ஜாகிர் உசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின்படி வந்த எண்ணுார் போலீசார், அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொலையில் தொடர்புடைய எண்ணுார் சத்தியவாணி முத்துநகரைச் சேர்ந்த கிஷோர், 22, அருண்குமார், 22, ரமேஷ் குமார், 24, கார்த்தி, 23, ஆகிய நால்வரை கைது செய்தனர். தலைமறைவான மூவரை தேடி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், பிரபல ரவுடி ஒத்த கை சுந்தர் என்பவரை, ஐந்து மாதங்களுக்கு முன், எண்ணுார் கடைவீதியில் வைத்து, பொதுமக்கள் முன்னிலையில் ஜாகிர் உசேன் அடித்துள்ளார்.இதனால், முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், வழக்கு ஒன்றில் சுந்தர் சிறைக்கு சென்றாலும், சிறையில் திட்டம் தீட்டி, தன் நண்பரான அருண் வாயிலாக, ஜாகிர் உசேனை கொல்ல திட்டமிட்டதாக, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X