பைக் மீது டிப்பர் லாரி மோதல்பிளஸ் 2 மாணவர் பரிதாப பலி

Added : செப் 20, 2022 | |
Advertisement
வானுார்-வானுார் அருகே டிப்பர் லாரி மோதி பிளஸ் 2 மாணவர் இறந்தார். விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரியை பொதுமக்கள் கல் வீசி தாக்கினர்.புதுச்சேரி, குருமாம்பேட் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். மளிகைக் கடை உரிமையாளர். இவரது மகன் ராகவன், 17; முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர்கள் குடும்பத்துடன், பொறையார் பகுதி யில் வாடகை
பைக் மீது டிப்பர் லாரி மோதல்பிளஸ் 2 மாணவர் பரிதாப பலி



வானுார்-வானுார் அருகே டிப்பர் லாரி மோதி பிளஸ் 2 மாணவர் இறந்தார். விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரியை பொதுமக்கள் கல் வீசி தாக்கினர்.புதுச்சேரி, குருமாம்பேட் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். மளிகைக் கடை உரிமையாளர். இவரது மகன் ராகவன், 17; முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர்கள் குடும்பத்துடன், பொறையார் பகுதி யில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.நேற்று காலை 8:00 மணியளவில் ராகவன், பள்ளிக்கு செல்வதற்காக பொறையார் கிராமத்தைச் சேர்ந்த செல்வ கார்த்திக், 30; என்பவருடன், பைக்கில் லிப்ட் கேட்டு வந்துள்ளார்.பைக், புதுச்சேரி - வழுதாவூர் சாலை வாழப்பட்டாம்பாளையம் சந்திப்பில் வந்தபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியது. லாரி டிரைவர் தப்பியோடினார்.இதில், செல்வ கார்த்திக் காயமின்றி தப்பினார். படுகாயமடைந்த ராகவனை அப்பகுதி மக்கள் மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ராகவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே அப்பகுதியைச் சேர்ந்த சிலர் விபத்து ஏற்படுத்திய லாரி மீது கல்வீசி தாக்கி முன் பக்க கண்ணாடியை சேதப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.தகவலறிந்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இறந்த மாணவன் ராகவன் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X