பிறந்த நாளில் போலீஸ்காரர் தற்கொலை

Added : செப் 20, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை-உளுந்துார்போட்டையில் போலீஸ்காரர் பிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த ஏ. அகரம் பகுதியைச் சேர்ந்தவர் மாயவேல் மகன் பாஸ்கர், 36; இவர் கடந்த 2008ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்து, தற்போது உளுந்துார்பேட்டை போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் போலீசராக பணிபுரிந்து
பிறந்த நாளில் போலீஸ்காரர் தற்கொலை



உளுந்துார்பேட்டை-உளுந்துார்போட்டையில் போலீஸ்காரர் பிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த ஏ. அகரம் பகுதியைச் சேர்ந்தவர் மாயவேல் மகன் பாஸ்கர், 36; இவர் கடந்த 2008ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்து, தற்போது உளுந்துார்பேட்டை போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் போலீசராக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு சுகுணா, 33;என்ற மனைவி, கோகுலவாசன், 9; லிங்கரன், 7; ஆகிய மகன்கள் உள்ளனர். பாஸ்கர் உளுந்துார்பேட்டை அண்ணா நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று அவருக்கு பிறந்த நாள். பணி முடிந்து வீட்டிற்கு சென்ற பாஸ்கர், நேற்று மாலை 4.30 மணியளவில் வீட்டின் மாடியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் பாஸ்கர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.தற்கொலைக்கு அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக என்ற கோணத்திலும் உயர் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். பிறந்த நாளில் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உளுந்துார்பேட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X