வருவாய் ஆய்வாளர் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி; செஞ்சியில் போலீஸ் விசாரணை| Dinamalar

வருவாய் ஆய்வாளர் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி; செஞ்சியில் போலீஸ் விசாரணை

Added : செப் 20, 2022 | |
செஞ்சி-மண் திருட்டை தடுக்கச் சென்ற வருவாய் ஆய்வாளர் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மீனம்பூர் ஏரியில் நேற்று முன்தினம் இரவு மண் திருட்டு நடப்பதாக செஞ்சி தாசில்தார் நெகருன்னிசாவுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளர் கண்ணன், வி.ஏ.ஓ., மணிகண்டன் ஆகியோர் இரவு

செஞ்சி-மண் திருட்டை தடுக்கச் சென்ற வருவாய் ஆய்வாளர் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மீனம்பூர் ஏரியில் நேற்று முன்தினம் இரவு மண் திருட்டு நடப்பதாக செஞ்சி தாசில்தார் நெகருன்னிசாவுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளர் கண்ணன், வி.ஏ.ஓ., மணிகண்டன் ஆகியோர் இரவு 9:30 மணிக்கு சம்பவ இடத்திற்குச் சென்றனர்.அங்கு ஜே.சி.பி., மூலம், 3 டிராக்டர்களில் மண் ஏற்றிக் கொண்டிருந்த கும்பல் தப்பியது. அப்போது, வருவாய் ஆய்வாளர் கண்ணன் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயன்றனர்.அருகில் இருந்த வி.ஏ.ஓ., மணிகண்டன், வருவாய் ஆய்வாளரை இழுத்து புதரில் தள்ளியதால் அவர் உயிர் தப்பினார்.இது குறித்து வி.ஏ.ஓ., மணிகண்டன், செக்கடிகுப்பத்தைச் சேர்ந்த ஜே.சி.பி., உரிமையாளர் தமிழ்க்குடிமகன், டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயன்ற உஸ்மான் உட்பட 6 பேர் மீது அளித்த புகாரின் பேரில், செஞ்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X