கழிவுநீர் கலந்த குடிநீர் சப்ளை; பொதுமக்கள் ரோடு மறியல்

Added : செப் 20, 2022 | |
Advertisement
பெரியகுளம் : பெரியகுளம் இந்திராபுரித்தெருவில் சாக்கடை கலந்த குடிநீர் வினியோகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.பெரியகுளம் நகராட்சி 30 வது வார்டு இந்திராபுரி தெருவில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.கடந்த வாரம் இந்த பகுதியை ஒட்டியுள்ள எம்.ஜி.ஆர்., ரோடு, தெரு நுழைவுப் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு
கழிவுநீர் கலந்த குடிநீர் சப்ளை; பொதுமக்கள் ரோடு மறியல்

பெரியகுளம் : பெரியகுளம் இந்திராபுரித்தெருவில் சாக்கடை கலந்த குடிநீர் வினியோகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

பெரியகுளம் நகராட்சி 30 வது வார்டு இந்திராபுரி தெருவில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.கடந்த வாரம் இந்த பகுதியை ஒட்டியுள்ள எம்.ஜி.ஆர்., ரோடு, தெரு நுழைவுப் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு சீரமைக்க பள்ளம் தோண்டினர். இதன் அருகே செல்லும் குடிநீர் குழாய் உடைந்தது. பாதாள சாக்கடை சீரமைப்பு முறையாக செய்யாமல் அவரச கதியில் தோண்டிய பள்ளம் மூடப்பட்டது. இதனால் குடிநீருடன், பாதாள சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து கருப்பு நிறத்திலான குடிநீர் துர்நாற்றத்துடன் வினியோகிக்கப்பட்டது. பொதுமக்கள் நகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இதனை கண்டித்து நேற்று காலை மூன்றாந்தால் பகுதியில்பொதுமக்கள் காலி குடங்களுடன் அரை மணிநேரம் ரோடு மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. தென்கரை எஸ்.ஐ., மணிகண்டன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். அதிகாரிகள் அலட்சியம்: இப் பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்படுவதும் அதை சீரமைக்க பள்ளம் தோண்டும் போது குடிநீர் குழாய் சேதமாகி குடிநீருடன் கழிவுநீர் கலப்பது வாடிக்கையாக உள்ளது. சீரமைப்பு பணி நடக்கும் போது நகராட்சி பொறியாளர் ஆய்வு செய்து முறையாக இணைப்பு உள்ளதாக என கண்காணிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X