பிரளயகாலேஸ்வரர் கோவிலில் வேல், சேவல் கொடி திருட முயற்சி

Added : செப் 20, 2022 | |
Advertisement
பெண்ணாடம்-பெண்ணாடத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலில், சுவாமி மீது சாற்றியிருந்த வேல் மற்றும் சேவல் கொடியை திருட முயற்சி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கீழ் செயல்படும், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த, அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தரிசனம் செய்ய
பிரளயகாலேஸ்வரர் கோவிலில் வேல், சேவல் கொடி திருட முயற்சி



பெண்ணாடம்-பெண்ணாடத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலில், சுவாமி மீது சாற்றியிருந்த வேல் மற்றும் சேவல் கொடியை திருட முயற்சி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கீழ் செயல்படும், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த, அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தரிசனம் செய்ய தினசரி ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.நேற்று மாலை 5:00 மணியளவில், பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, முருகர் சன்னதியில் புகுந்த மர்ம நபர், சுவாமி மீது சாற்றியிருந்த 2 அடி உயரம் கொண்ட தலா 1 கிலோ எடையுள்ள பித்தளையிலான வேல் மற்றும் சேவல் பொறித்த கொடியை எடுத்து சட்டைக்குள் மறைக்க முயன்றார்.அப்போது, வேல் மற்றும் சேவல் கொடி இரண்டும் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தது. இதை பார்த்த பக்தர்கள் கூச்சலிட, கோவில் பணியாளர்கள் ஓடிவந்து மர்ம நபரை பிடித்து பெண்ணாடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் தீபன், தனிப்பிரிவு ஏட்டு தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார், மர்ம நபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், பிடிப்பட்ட ஆசாமி, பெண்ணாடம் அடுத்த இறையூர், மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த ராமு, 42, என்பதும், போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் உடையவர் என்பது தெரிந்தது.போதையில் கோவிலுக்குள் புகுந்து சுவாமி மீது சாற்றியிருந்த வேல் மற்றும் கொடியை திருட முயன்றது தெரிந்தது. பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து ராமுவை கைது செய்தனர்.திருடப்பட்ட இரண்டு வேலையும் போலீசார் மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் பெண்ணாடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X