குறத்தி ஆட்டத்திற்கு எதிராக வழக்கு; கூடுதல் ஆவணம் கேட்கிறது ஐகோர்ட்

Added : செப் 20, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மதுரை : குறவன், குறத்தி ஆட்டத்தில் ஆபாசம் இருப்பதாகவும், அதற்கு தடை கோரியும் தாக்கலான வழக்கில், மனுதாரர் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.மதுரை, விளாங்குடி இரணியன் தாக்கல் செய்த பொதுநல மனு:கிராம கோவில் விழாக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். குறவன், குறத்தி ஆட்டங்களில், முன்னர், நீதிக் கதைகளை
குறத்தி ஆட்டத்திற்கு எதிராக வழக்கு; கூடுதல் ஆவணம் கேட்கிறது ஐகோர்ட்



மதுரை : குறவன், குறத்தி ஆட்டத்தில் ஆபாசம் இருப்பதாகவும், அதற்கு தடை கோரியும் தாக்கலான வழக்கில், மனுதாரர் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.மதுரை, விளாங்குடி இரணியன் தாக்கல் செய்த பொதுநல மனு:கிராம கோவில் விழாக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.

குறவன், குறத்தி ஆட்டங்களில், முன்னர், நீதிக் கதைகளை வெளிப்படுத்துவர்.சமூகத்திற்கு நற்செய்திகளை தெரிவிக்கும் வகையில், அக்கலை இருந்தது.தற்போது, ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெறுகின்றன. ஆடல், பாடல் என்ற பெயரில் நடக்கும் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.சமூக வலைதளங்களிலிருந்து குறவன், குறத்தி ஆட்டத்தின் பதிவுகளை நீக்க, மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.

நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு, 'மனுதாரர் கூறும் நிகழ்வு, எங்கெங்கு, எப்போது நடந்தன என்பதை தெளிவுபடுத்தி, கூடுதல் ஆவணங்களை அவர் ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
W W - TRZ,இந்தியா
20-செப்-202207:45:22 IST Report Abuse
W W பார்க்க கூடாத, பார்க்க முடியாத ஆட்டம், குடிகார குடி மகன்கள் மட்டுமே ரசிக்கும் ஆட்டம். கலையை கொலை செய்யும், தண்ணி வண்டிகளின் ஆட்டம்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
20-செப்-202207:25:19 IST Report Abuse
சீனி திராவிட டாஸ்மாக்கில் போய் குடித்துவிட்டு வரும் குடிமகன், திருக்குறளா கேட்க வருவான்? விளாங்குடி இரணியன், குறவன்-குறத்திகளுடன் எப்படிப்பட்ட கதை சொல்லவேண்டும் என திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என இறங்கினால் நல்லது. அவர்களுக்கு மதுரை பல்கலை கழகத்துடன் இணைந்து, கிராமியகலைகள் என்ற பெயரில் பட்டமும் கொடுக்கலாமே. குறை சொல்வது எளிது, ஆனால் ஆக்கபூர்வமா செயல்படுவது கடினம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X