கீழணை, வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

Added : செப் 20, 2022 | |
Advertisement
சிதம்பரம் -கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கான தண்ணீரை, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.தஞ்சை மாவட்டம் அணைக்கரை பகுதியில் அமைந்துள்ளது கீழணை. 1836ம் ஆண்டில் சர் ஆர்தர் காட்டன் என்பவரால் கட்டப்பட்ட கீழணையில், மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் கல்லணை வழியாக கொண்டு வந்து தேக்கப்படுகிறது. இங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கும்,
கீழணை, வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு



சிதம்பரம் -கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கான தண்ணீரை, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.தஞ்சை மாவட்டம் அணைக்கரை பகுதியில் அமைந்துள்ளது கீழணை. 1836ம் ஆண்டில் சர் ஆர்தர் காட்டன் என்பவரால் கட்டப்பட்ட கீழணையில், மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் கல்லணை வழியாக கொண்டு வந்து தேக்கப்படுகிறது. இங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கும், வடக்கு ராஜன், கஞ்சங்கொள்ளை, தெற்கு ராஜன், கும்கிமன்னியார் மற்றும் மேலராமன் வாய்க்கால்கள் மூலம் பாசனத்திற்கும் தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது.நிகழ்ச்சியில் வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று கீழணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். இதில், வடவாற்றில் 2 ஆயிரத்து 200, வடக்கு ராஜனில் 750, தெற்கு ராஜனில் 650, கும்கி மற்றும் மேலராமன் வாய்க்காலில் 175 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, மொத்தம் 3 ஆயிரத்து 775 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.இதன் மூலம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் நிலங்கள் சம்பா சாகுபடிக்கு பாசனம் பெறுகிறது.


வீராணத்தில் திறப்பு


கீழணையை தொடர்ந்து,கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரியின் ராதா மதகில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். வீராணம் ஏரியின் முழு கொள்ளவான 1465 மில்லியன் கன அடி முழுமையாக உள்ள நிலையில், ஏரியில் உள்ள 34 மதகுகள் வழியாக விநாடிக்கு 405 கன அடி தண்ணீர் பாசனத்திற்கு வெளியேற்றப்படுகிறது.இதன் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து, விவசாயிகளின் தேவைக்கேற்ப பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படும்.விழாவில் அரசு தலைமை கொறடா கோவி செழியன், எம்.எல்.ஏ.,க்கள் பன்னீர்செல்வம், சிந்தனை செல்வன், மயிலாடுதுறை எம்.பி., ராமலிங்கம், காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, விவசாய சங்க தலைவர்கள் விநாயகமூர்த்தி, ரவீந்திரன், மணிக்கொல்லை ராமச்சந்திரன், பாலு, ரங்கநாயகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


உரம் கையிருப்பு


அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், 'சம்பா சாகுபடியை பொருத்தவரை தேவையான உரங்கள் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு கையிருப்பில் உள்ளது. உரத் தட்டுப்பாடு ஏற்படுகிறதா என வேளாண் துறை மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.உரக்கடைகளில் உரங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா என்றும் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். சம்பா பருவத்திற்கு கூடுதலாக உரங்களை அதிக அளவில் ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X