உத்தரவுகாய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த கவர்னர் உத்தரவு

Added : செப் 20, 2022 | |
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த, நடமாடும் மருத்துவமனைகளை ஏற்படுத்தவும், அவசரகால மருத்துவ குழு அமைக்கவும் கவர்னர் தமிழிசை, சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டார்.பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.காய்ச்சல், சளி, இருமல்
உத்தரவுகாய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த கவர்னர் உத்தரவு



புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த, நடமாடும் மருத்துவமனைகளை ஏற்படுத்தவும், அவசரகால மருத்துவ குழு அமைக்கவும் கவர்னர் தமிழிசை, சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டார்.பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரு தினங்களுக்கு முன் 705 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில் நேற்று முன்தினம், புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் 35, ராஜிவ்காந்தி குழந்தைகள் மருத்துவமவையில் 508, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 16 பேர் என மொத்தம் 559 பேர் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைக்காக வந்தனர்.இவர்களில் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 8பேர், ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 23 பேர், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 7 பேர் என மொத்தம் 39 பேர் தீவிர காய்ச்சலுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் வைரஸ் காய்ச்சல் பரவல் நிலவரம் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.கவர்னர் தமிழிசை, ஐதராபாத்தில் இருந்து காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் பங்கேற்றார்.தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா, சுகாதாரத் துறை செயலர் உதயகுமார், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்தரி, ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் அகர்வால், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை இயக்குநர் சுஜாதா, இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி இயக்குனர் உதயசங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.வைரஸ் காய்ச்சல் பரவலின் தற்போதைய நிலவரம், சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், சளி, ரத்த மாதிரி சோதனைகள், மருத்துவர்கள், படுக்கை வசதி, மருந்துகளின் இருப்பு நிலவரம், மருத்துவ ஊழியர்களை கூடுதலாக பணியமர்த்துதல் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது.கூட்டத்தில் கவர்னர் தமிழிசை ஆலோசனை வழங்கி பேசியதாவது.தற்போதைய சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பள்ளிகளுக்கு ஒரு வார கால விடுமுறை விடப்பட்டிருந்தாலும், தீவிர கவனம் செலுத்தி குழந்தைகளுக்கு தொற்று பரவுவதை குறைக்க வேண்டும். குழந்தைகளிடமிருந்து பெரியவர்களுக்கு பரவாமல் பாதுகாக்க வேண்டும். நடமாடும் மருத்துவமனைகள், அவசரகால மருத்துவ குழுவினரை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் சிகிச்சை பிரிவு, வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு ஆகியவற்றில் கூடுதல் மருத்துவர்களை, மருத்துவ ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்.காய்ச்சல் பரவுவதால் மக்களிடையே ஏற்படும் அச்சத்தை போக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் பின்பற்ற வேண்டிய எச்சரிக்கை வழிமுறை கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற துாய்மை பழக்கங்களைப் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அறிவியல் பூர்வமான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். தடுப்புப் பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மருத்துவ மனைகளில் சிகிச்சைக்கான மருந்துகளை போதிய அளவு இருப்பு வைக்க வேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு கவர்னர் ஆலோசனை வழங்கினார்.

215 குழந்தைகளுக்கு சிகிச்சை

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 31 குழந்தைகள், ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 165, காரைக்கால் அரசு மருத்துவமனையில் 19 என மொத்தம் 215 குழந்தைகள், காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X