முழுவதும் ஒளிரும் சிக்னல் கம்பம்; பரிசோதனை முயற்சி துவக்கம்

Added : செப் 20, 2022 | |
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து சமிக்ஞை நன்றாக தெரியும் வகையில், இனி சிக்னல் கம்பம் முழுதுவமாக ஒளிர உள்ளது.புதுச்சேரி ராஜா தியேட்டர் சந்திப்பில், போக்குவரத்து சிக்னல் அமைந்துள்ளது. துாரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு சிக்னல் நன்றாகத் தெரியும் வகையில், கம்பம் முழுவதும் எல்.இ.டி.,விளக்குகள் ஒளிரும் வகையில் தற்போது
முழுவதும் ஒளிரும் சிக்னல் கம்பம்; பரிசோதனை முயற்சி துவக்கம்



புதுச்சேரி-புதுச்சேரி சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து சமிக்ஞை நன்றாக தெரியும் வகையில், இனி சிக்னல் கம்பம் முழுதுவமாக ஒளிர உள்ளது.புதுச்சேரி ராஜா தியேட்டர் சந்திப்பில், போக்குவரத்து சிக்னல் அமைந்துள்ளது. துாரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு சிக்னல் நன்றாகத் தெரியும் வகையில், கம்பம் முழுவதும் எல்.இ.டி.,விளக்குகள் ஒளிரும் வகையில் தற்போது மாற்றப்பட்டுள்ளது.இந்த ஒளிரும் சிக்னல் கம்பம் பரிசோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா நேற்று பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.எஸ்.பி.,மாறன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார்,கீர்த்திவர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.போக்குவரத்து போலீசார் கூறும்போது, 'ராஜா தியேட்டர் சந்திப்பில் தானியங்கி சிக்னல் இயங்கி வருகிறது. இந்த சிக்னலில், எந்த விளக்கு எரிகிறதோ, அதே வண்ணம் சிக்னல் கம்பம் முழுவதும் எரிந்து ஒளிரும் வகையில் எல்.இ.டி., விளக்குகளை இணைத்து, பரிசோதனை முயற்சியை துவங்கியுள்ளோம்.இதன் மூலம் துாரத்தில் இருந்தாலும் வாகன ஓட்டிகளுக்கு சிக்னல் தடையின்றி தெரியும். சென்னை நகரில் இது போன்று சிக்னல்கள் ஒளிர்கிறது. அதனை முன் மாதிரியாக கொண்டு புதுச்சேரியில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம். அடுத்தடுத்து மற்ற சிக்னல்களுக்கும் விரிவுபடுத்தப்படும்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X