கேட்டதும் வரம் கொடுக்கும் முதல்வர்: அமைச்சர் ஐ.பெரியசாமி புகழாரம்| Dinamalar

கேட்டதும் வரம் கொடுக்கும் முதல்வர்: அமைச்சர் ஐ.பெரியசாமி புகழாரம்

Added : செப் 20, 2022 | |
கன்னிவாடி: ''கேட்டவுடன் வரம் கொடுக்கும் கடவுளாக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்,'' என, அமைச்சர் ஐ. பெரியசாமி பேசினார்.ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் அங்கன்வாடி கட்டடங்கள், திருமலைராயபுரத்தில் சமுதாயக்கூடத்தை திறந்து வைத்த அவர் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் பாரபட்சமின்றி நலத்திட்டங்கள் அனைத்து பகுதிகளுக்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கேட்டதும் வரம் கொடுக்கும் முதல்வர்: அமைச்சர் ஐ.பெரியசாமி புகழாரம்

கன்னிவாடி: ''கேட்டவுடன் வரம் கொடுக்கும் கடவுளாக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்,'' என, அமைச்சர் ஐ. பெரியசாமி பேசினார்.



ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் அங்கன்வாடி கட்டடங்கள், திருமலைராயபுரத்தில் சமுதாயக்கூடத்தை திறந்து வைத்த அவர் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் பாரபட்சமின்றி நலத்திட்டங்கள் அனைத்து பகுதிகளுக்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு ஆத்துார் தொகுதியில் 25 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவி தேவை வழங்கப்பட்டது .



அ.தி.மு.க., ஆட்சியில் பலருக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது நிறுத்தப்பட்ட பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கேட்டவுடன் வரம் கொடுக்கும் கடவுளாக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். எந்த ஒரு பணியையும் நாளை என ஒத்தி வைக்காமல் உடனுக்குடன் துரிதப்படுத்தி முடிப்பதில் தி.மு.க., தலைவர் முதல் தொண்டர் வரை அனைத்து தரப்பினரும் சுறுசுறுப்பாக உள்ளனர், என்றார்.



கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி, புரட்சி ஒன்றிய தலைவர் சிவகுருசாமி, முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, பேரூராட்சி தலைவர் சகிலா, துணைத் தலைவர் முருகேசன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், செயல் அலுவலர் விஜயா முன்னிலை வகித்தனர்.தி.மு.க., பேரூர் செயலாளர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் திருப்பதி, நாகலட்சுமி, காளீஸ்வரி, ஊராட்சி தலைவர் சக்தி பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X