மணக்குள விநாயகர் கல்லுாரி மாணவர்கள் சாதனை

Added : செப் 20, 2022 | |
Advertisement
புதுச்சேரி-பிளாக்செயின் ஸ்கில் சம்மிட் போட்டியில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.அகாடமி ஆப் பிளாக்செயின் கவுன்சில், துபாய் நிறுவனம் சார்பில், பிளாக்செயின் ஸ்கில் சம்மிட் போட்டி நடைபெற்றது.இப்போட்டியில், பொறியியல் கல்லுாரி மாணவர்கள் தங்களது ஆராய்ச்சி திறன்களை தொழில் மயமாக்குவதற்கான பல்வேறு ஆய்வுத்திறன் அறிக்கைகளை
மணக்குள விநாயகர் கல்லுாரி மாணவர்கள் சாதனை



புதுச்சேரி-பிளாக்செயின் ஸ்கில் சம்மிட் போட்டியில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.அகாடமி ஆப் பிளாக்செயின் கவுன்சில், துபாய் நிறுவனம் சார்பில், பிளாக்செயின் ஸ்கில் சம்மிட் போட்டி நடைபெற்றது.இப்போட்டியில், பொறியியல் கல்லுாரி மாணவர்கள் தங்களது ஆராய்ச்சி திறன்களை தொழில் மயமாக்குவதற்கான பல்வேறு ஆய்வுத்திறன் அறிக்கைகளை வழங்கினர்.இதில் 1200க்கும் மேற்பட்ட குழு அறிக்கைகள் தேர்வு செய்யப்பட்டது. இறுதிப்போட்டி கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்றது.மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்கள் ஸ்ரீ அரோபிந் ராம், விக்னேஷ், வைத்தியலிங்கம், பாலாஜி, லோகேஷ்வர்மன் ஆகியோர் சமர்ப்பித்த மென்பொருள் ஆய்வறிக்கை முதலிடம் பெற்றது. பரிசுத் தொகையாக ரூ ஒரு லட்சம் மற்றும் துபாயில் இண்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கப்பட்டது.பரிசு வென்ற மாணவர்களை மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன், கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி ஆகியோர் பாராட்டினர். மேலும், கல்லுாரி தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் ராஜு, துறையின் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X