மாமல்லபுரம் சிற்பங்கள் மாற்றுத்திறனாளிகள் குதுாகலம்

Added : செப் 20, 2022 | |
Advertisement
மாமல்லபுரம் : அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், தமிழ் மாநில நான்காம் மாநாடு, சென்னை அடுத்த, மறைமலை நகரில், நேற்று நடத்த ஏற்பாடானது. இதில் பங்கேற்க, மாநிலம் முழுதும் இருந்தும், மாற்றத்திறனாளிகள், நேற்று காலையில் இருந்து, இப்பகுதிக்கு படையெடுத்தனர்.மாநாடு மாலையில் நடக்கவிருந்த நிலையில், ஏராளமானோர், மாமல்லபுரத்தில்
மாமல்லபுரம் சிற்பங்கள் மாற்றுத்திறனாளிகள் குதுாகலம்



மாமல்லபுரம் : அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், தமிழ் மாநில நான்காம் மாநாடு, சென்னை அடுத்த, மறைமலை நகரில், நேற்று நடத்த ஏற்பாடானது. இதில் பங்கேற்க, மாநிலம் முழுதும் இருந்தும், மாற்றத்திறனாளிகள், நேற்று காலையில் இருந்து, இப்பகுதிக்கு படையெடுத்தனர்.மாநாடு மாலையில் நடக்கவிருந்த நிலையில், ஏராளமானோர், மாமல்லபுரத்தில் குவிந்தனர். அவர்களின் அடையாள ஆவணம் பரிசோதித்து, இலவசமாக அனுமதிக்கப்பட்டனர்.

கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் உள்ளிட்ட சிற்பங்களின் கலைநயம் கண்டு வியந்தனர்.கடற்கரை கோவில் பகுதியில், புல்வெளி பகுதி நுழைவாயிலில் இருந்து, கோவில் நுழைவாயில் வரை, பேட்டரி வாகனத்தில் கடந்தனர். கோவில் நுழைவாயிலில் இருந்து, கோவில் பகுதிக்கு செல்ல, சக்கர நாற்காலி இன்றி, தவழ்ந்தும், ஊன்றுகோலுடனும் கடந்து, கடும் சிரமப்பட்டனர். சுற்றுலாவை முடித்து, மறைமலை நகர் புறப்பட்டனர்.



மறக்க முடியாது...


தர்மபுரியை சேர்ந்த கோவிந்தம்மாள் கூறியதாவது: என் ஊரிலிருந்து, கலெக்டர், தாசில்தார், பி.டி.ஓ., ஆகிய அலுவலக பகுதிகள் வரை, அதிகபட்ச துாரமாக பயணம் செய்துள்ளேன். மற்ற இடத்திற்கு சென்றதில்லை. சென்னை பகுதிக்கே, இப்போதுதான் முதல் முறையாக வந்துள்ளேன்,மாமல்லபுரம் சிற்பங்கள், எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இவ்வளவு துாரம் வந்த நான், வெயிலாக இருந்தாலும் பரவாயில்லை என, சுடும் தரையில் தவழ்ந்து வந்து, சிற்பங்கள் பார்த்தது, மகிழ்ச்சியாக உள்ளது.அலைகள் சத்தத்துடன் உள்ள கடலையும், இப்போதுதான் முதல்முறையாக பார்த்து வியந்தேன்.இவ்வாறு அவர் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X