மனுக்கள் கொடுத்து எந்த பயனும் இல்லை; மாற்றுத்திறனாளிகள் தர்ணா

Added : செப் 20, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கோவை : மனுக்கள் கொடுத்து எந்த பயனும் இல்லை எனக்கூறி, கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சமீரன் தலைமையில், உயரதிகாரிகள் மனுக்கள் பெற்றுக் கொண்டிருந்தனர்.அலுவலக வளாகத்தில் காது கேளாத, வாய் பேசாத என, 75
மனுக்கள் கொடுத்து எந்த பயனும் இல்லை; மாற்றுத்திறனாளிகள் தர்ணா

கோவை : மனுக்கள் கொடுத்து எந்த பயனும் இல்லை எனக்கூறி, கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சமீரன் தலைமையில், உயரதிகாரிகள் மனுக்கள் பெற்றுக் கொண்டிருந்தனர்.

அலுவலக வளாகத்தில் காது கேளாத, வாய் பேசாத என, 75 மாற்றுத்திறனாளிகள், திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கலெக்டரிடம், 'ஒவ்வொரு முறையும் மனுக்கள் வாங்குகிறீர்கள். எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழக முதல்வர் உத்தரவை கூட செயல்படுத்த மறுக்கிறீர்கள்' எனக் குற்றம் சாட்டினர்.அதற்கு கலெக்டர், 'தமிழக அரசின் கவனத்துக்கு உங்கள் கோரிக்கையை கொண்டு செல்கிறேன். அரசிடம் இருந்து வரும் பதிலை உங்களுக்கு தருகிறேன்' எனக்கூறி சென்றார்.

மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:மாற்றுத்திறனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியத்தில் நான்காவது மாடியில் வீடு ஒதுக்குகின்றனர். இலங்கை தமிழர்களுக்கு கட்டிக் கொடுப்பது போல, எங்களுக்கு பிரத்யேகமாக கட்டித்தர வேண்டும்.குறைகளை தெரிவிக்க, 'ஹெல்ப் லைன்' எண் தேவை. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளியை திறக்க வேண்டும்.வேலைவாய்ப்பில், 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அரசாணை இருக்கிறது. அரசு அலுவலகங்களில் ஆவின் பாலகங்கள் நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.ஆனால், கோவையில் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகள், முதல்வரை நேரில் சந்திக்க, 10 நிமிடம் அனுமதி தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


முதல்வரின் துறை!

முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கவனிக்கும் துறைகளில் மாற்றுத்திறனாளிகள் துறையும் ஒன்று. சமீபத்தில் கோவை, ஈச்சனாரியில் நடந்த விழாவுக்கு முதல்வர் வந்தபோது, மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். பேச்சு நடத்தி அவர்களை, அதிகாரிகள் விழா நடந்த இடத்துக்கு அழைத்து வந்தனர்.ஆனால், முதல்வரின் கவனத்துக்கு அவர்களது குறையை கொண்டு செல்லவே இல்லை. முதல்வரின் துறைக்கே இந்த நிலையா என்பது பலரின் ஆதங்கம்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - Madurai,இந்தியா
20-செப்-202211:22:41 IST Report Abuse
Raman மாற்றுத்திறனாளிகள் தங்களது விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி cmcell@tn.gov.in
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
20-செப்-202208:55:07 IST Report Abuse
Mohan மூன்றாம் பாலினத்தவர்களை திருநங்கையராக்குவோம், ஊனமுற்றவர்களை மாற்றுத் திறனாளிகளாக்குவோம், நரிக்குறவர்களை பழங்குடியினராக்குவோம் இப்படி உங்க பெயரை மாற்றுவோமே தவிர உங்க பொசிஷனை மாற்றவே ...
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
20-செப்-202208:26:23 IST Report Abuse
mindum vasantham Dmk is more interested in creating riots using a raja
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X