சென்னை பெருநகர எல்லை விரிவாக்கம்: ஒரு வாரத்தில் வெளியாகிறது அரசாணை!

Updated : செப் 20, 2022 | Added : செப் 20, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
சென்னை: சென்னை பெருநகர் பகுதி எல்லை விரிவாக்கம் செய்வதில் திருத்தம் மேற்கொள்வது குறித்த அரசாணை, ஒரு வாரத்தில் வெளியாகிறது. மூன்றாவது முழுமை திட்டத்தை தயாரிக்கும் நிலையிலேயே, மக்களின் கருத்துகளை கேட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்திற்கு, தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கும் திட்ட பணிகள் துவங்கியுள்ளன.

சென்னை: சென்னை பெருநகர் பகுதி எல்லை விரிவாக்கம் செய்வதில் திருத்தம் மேற்கொள்வது குறித்த அரசாணை, ஒரு வாரத்தில் வெளியாகிறது. மூன்றாவது முழுமை திட்டத்தை தயாரிக்கும் நிலையிலேயே, மக்களின் கருத்துகளை கேட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.latest tamil news
சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்திற்கு, தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கும் திட்ட பணிகள் துவங்கியுள்ளன. இதற்கான பயிலரங்கு, சி.எம்.டி.ஏ., சார்பில் சென்னையில் நடத்தப்பட்டது.இந்த பயிலரங்கில், முழுமை திட்டத்தில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிப்பதற்கான புதிய இணையதளத்தை, சி.எம்.டி.ஏ., தலைவரும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான முத்துசாமி துவக்கி வைத்தார்.

'நோட்டீஸ்'நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:பொதுவாக ஒரு இடத்தில் புதிதாக ஒரு கட்டடம் கட்டப்படுகிறது என்றால், அப்பகுதி வழியே அனைவரும் சென்று வருகிறோம். அது மிகப் பெரிய அடுக்குமாடி கட்டடமாக வளர்ந்து நிற்கும் போது தான், அதிகாரிகள் விதிமீறலை கண்டுபிடித்து 'நோட்டீஸ்' அளிக்கின்றனர்.

இதேபோன்று, பொது பயன்பாட்டுக்கான நிலம், அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றில் மக்கள் குடிசை போட்டு குடியேறும் போது, அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. அதிக குடிசைகள் வரும் போது தான், அது ஆக்கிரமிப்பு என நோட்டீஸ் அளிக்கின்றனர். சென்னை பெருநகரில், பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இத்திட்டங்களை செயல்படுத்தும் போது, அதில் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள சாதாரண மனிதர்களிடம் கருத்து கேட்பது மிக முக்கியமானது.வல்லுனர்கள் மட்டும் கருத்து தெரிவித்தால் போதும் என்ற நிலையில் இருந்து, மக்களை தேடிச் சென்று கருத்து கேட்க வேண்டியது அவசியம்.கருத்து கேட்புசென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்தை தயாரிக்கும் நிலையிலேயே, மக்களின் கருத்துகளை கேட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, சென்னை பெருநகர் எல்லைக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் கருத்து கேட்பு கூட்டங்கள் தனித்தனியாக நடத்தப்படும்.சென்னை பெருநகர் பகுதி தற்போது, 1,189 சதுர கி.மீ.,யாக உள்ளது. இது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வரை, சி.எம்.டி.ஏ., எல்லை விரிவடையப் போகிறது.

இந்த பகுதிகளில் ஏற்படும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இவற்றுக்கும் புதிய திட்டங்கள் தயாரிக்கும் பணிகளை சி.எம்.டி.ஏ., மேற்கொள்ளும். இதில், எல்லை தொடர்பான புதிய அரசாணை, ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.வெளிவட்ட சாலைவண்டலுார் வெளிவட்ட சாலையை ஒட்டியுள்ள, ௧௬௪ அடி பகுதியை, வணிக ரீதியாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ௧௬௪ அடியை ஒட்டியுள்ள, 2 கி.மீ., வரையிலான பகுதிகளில், நில தொகுப்பு முறையில் வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.இப்பகுதிகளில் என்னென்ன மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டுமோ அனைத்தையும், சி.எம்.டி.ஏ., மேற்கொள்ளும்.இதில் மேம்படுத்தப்பட்ட பகுதிகள், நில உரிமையாளர்களுக்கு, 40 அல்லது 50 சதவீதம் வரை வழங்கப்படும்.


latest tamil news
இதிலும், உள்ளூர் மக்களின் கருத்தைக் கேட்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். எந்த திட்டமானாலும், அதன் தரத்தில் எவ்வித சமரசமும் இன்றி செயல்பட வேண்டும்.விரிவாக்கம்இரண்டாவது முழுமை திட்டப்படி, சென்னையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, பகுதிகளின் மேம்பாடு அமைந்து இருக்கும்.

சென்னையில் அண்ணா சாலை உள்ளிட்ட, 10 பிரதான சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.இப்பகுதிகளில் புதிய கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் போது, விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான தொகை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு உரிய முறையில் ஈடு செய்யப்படுகிறது.இதேபோன்று, பல்வேறு அடிப்படை வசதிகளையும் தேவைக்கு ஏற்ப மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் ஹிதேஷ் குமார் மக்வானா, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சி.எம்.டி.ஏ., உறுப்பினர்கள் தாயகம் கவி உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கருத்து தெரிவிக்க இணையதளம்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர், ஹிதேஷ் குமார் மக்வானா கூறியதாவது:
சென்னை பெருநகருக்கு, 2008ல் இரண்டாவது முழுமை திட்டம் அறிவிக்கப்பட்டது. இது, 2026ல் முடிவுக்கு வருகிறது. எனவே, 2027 முதல் 2046 வரையிலான, 20 ஆண்டு களுக்கு மூன்றாவது முழுமை திட்டம் தயாரிக்கப்படுகிறது.அடிப்படை பணிகளில் இருந்தே, மக்களின் கருத்துகளை உள்ளடக்கிய வகையில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஓசூர், கோவை நகரங்களுக்கான முழுமை திட்டங்கள் அரசின் பரிசீலனையில் உள்ளன. நடப்பு ஆண்டில், 20 நகரங்களுக்கு புதிய முழுமை திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.மூன்றாவது முழுமை திட்ட தொலை நோக்கு ஆவணத்தில் என்னென்ன விஷயங்கள் இடம் பெற வேண்டும் என்பது குறித்து, மக்கள் கருத்து தெரிவிக்க தனி இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இதில் கேள்வி படிவம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்காக துவக்கப்பட்டுள்ள, http://cmavision.in என்ற இணையதளத்தில், மக்கள் தங்கள் கருத்துகளை முழுமையாக பதிவிடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-செப்-202221:27:52 IST Report Abuse
Bhaskaran முதலில் வீட்டுவரி ஏற்றுவோம்
Rate this:
Cancel
20-செப்-202217:35:54 IST Report Abuse
அப்புசாமி சென்னை மாநகரை நிர்வாக வசதிக்காக 2 அல்லது நாலாய்ப் பிரித்தால் தேவலை.
Rate this:
Cancel
samvijayv - Chennai,இந்தியா
20-செப்-202212:17:54 IST Report Abuse
samvijayv ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X