அரசு பெண் வக்கீலுக்கு வெட்டு திருப்பூரில் கோர்ட் புறக்கணிப்பு

Added : செப் 20, 2022 | |
Advertisement
திருப்பூர் : அரசு வக்கீல் மற்றும் அவரது மகள் அரிவாளால் வெட்டப்பட்டதை கண்டித்து, திருப்பூர் மாவட்டத்தில், வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட் அரசு வக்கீல் ஜமீலா பானு; அவர் மகள் நிஷா. நேற்று முன்தினம், குமரன் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் இருந்த இருவரையும், ரகுமான் கான் என்பவர் அரிவாளால் வெட்டி தப்பினார்.காயமடைந்த



திருப்பூர் : அரசு வக்கீல் மற்றும் அவரது மகள் அரிவாளால் வெட்டப்பட்டதை கண்டித்து, திருப்பூர் மாவட்டத்தில், வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட் அரசு வக்கீல் ஜமீலா பானு; அவர் மகள் நிஷா. நேற்று முன்தினம், குமரன் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் இருந்த இருவரையும், ரகுமான் கான் என்பவர் அரிவாளால் வெட்டி தப்பினார்.காயமடைந்த இருவரும், கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்; தப்பிய நபர் கைது செய்யப்பட்டார்.

வக்கீலும், அவரது மகளும் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், வக்கீல் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக் கோரியும், நேற்று திருப்பூரில் வக்கீல்கள் கோர்ட் நடவடிக்கைகளில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.அதே நேரம், நீதிபதிகள் மற்றும் அலுவலர்கள் வழக்கம் போல் பணியாற்றினர்.வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பால், நேற்று விசாரணைக்கு வந்த வழக்குகள், வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X