காஞ்சியில் 'வைரஸ்' காய்ச்சல் அதிகரிப்பு

Updated : செப் 20, 2022 | Added : செப் 20, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது குழந்தைகள் பெரியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் 'வைரஸ்' காய்ச்சல் அதிகரித்து வருகிறது.மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த காய்ச்சலுக்கு அருகில் உள்ள மருத்துவர்கள் ஆலோசனைபடி சிகிச்சை பெற வேண்டும். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், நிலவேம்பு கசாயம் குடிக்கலாம், காய்கறி, கீரை வகைகளை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது குழந்தைகள் பெரியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் 'வைரஸ்' காய்ச்சல் அதிகரித்து வருகிறது.

மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த காய்ச்சலுக்கு அருகில் உள்ள மருத்துவர்கள் ஆலோசனைபடி சிகிச்சை பெற வேண்டும். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், நிலவேம்பு கசாயம் குடிக்கலாம், காய்கறி, கீரை வகைகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்ச்சல் அதிகமாக கண்டறியப்படும் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்படுவதாக என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.



latest tamil news




இது குறித்து மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் பிரியாராஜ் கூறியதாவது:
தற்போது பல இடங்களில் வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பொது மக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் மருந்து கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் தண்ணீரை கொதிக்க வைத்து ஆறிய பின் குடிக்க வேண்டும். வெளியில் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க கூடிய நிலவேம்பு கசாயம் குடிக்கலாம். காய்கறிகள், கீரை வகைகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பகுதியில் காய்ச்சல் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள 28 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 15 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.மேலும் இந்த வைரஸ் காய்ச்சல் தடுப்பு பணியில் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் அந்த பணியுடன் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறித்தும் தகவல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் வாயிலாக தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X