மாநகராட்சி மைதானத்தில் நிரந்தர காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் வலியுறுத்தல்

Added : செப் 20, 2022 | |
Advertisement
மதுரை : மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி மைதானத்தில் 2010ல் திட்டமிட்டபடி நிரந்தர காய்கறி மார்க்கெட் அமைத்து தர எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தலைவர் சின்னமாயன், செயலாளர் கிருஷ்ணபாண்டி கூறியதாவது: மீனாட்சி அம்மன் கோயில் அருகே இருந்த சென்ட்ரல் மார்க்கெட் மாட்டுத்தாவணிக்கு தற்காலிகமாக

மதுரை : மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி மைதானத்தில் 2010ல் திட்டமிட்டபடி நிரந்தர காய்கறி மார்க்கெட் அமைத்து தர எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தலைவர் சின்னமாயன், செயலாளர் கிருஷ்ணபாண்டி கூறியதாவது: மீனாட்சி அம்மன் கோயில் அருகே இருந்த சென்ட்ரல் மார்க்கெட் மாட்டுத்தாவணிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. அங்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் 2010ல் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள 27 ஏக்கர் கொண்ட மாநகராட்சி மைதானத்தில் ரூ.85 கோடியில் நவீன வசதிகளுடன் நிரந்தர காய்கறி மார்க்கெட் அமைக்கப்படும் என அரசு தெரிவித்தது. ஆட்சி மாற்றத்தால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் 2019ல் மாநகராட்சி மைதானத்தில் வேறு அரசு கட்டுமானம் கட்டமைக்க கூடாது என நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றுள்ளோம். இதற்கிடையில் எங்களுக்கு ஒதுக்கிய மைதானத்தில் 'டைடல் பார்க்' அமைப்பதாக இருந்தால் அந்த முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாற்றிடம் தேர்வு செய்ய வேண்டும். அங்கு மார்க்கெட் அமைந்தால் விவசாயிகள், வியாபாரிகள் பயன்பெறுவர். இதுகுறித்து கலெக்டர் அனீஷ்சேகரிடம் மனு கொடுத்துள்ளோம் என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X