வியாபாரிகள் வர மறுத்ததால் உளுந்துார்பேட்டை கமிட்டி மூடல்| Dinamalar

வியாபாரிகள் வர மறுத்ததால் உளுந்துார்பேட்டை கமிட்டி மூடல்

Added : செப் 20, 2022 | |
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டிக்கு வியாபாரிகள் வர மறுத்ததால் மூடப்பட்டது.உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 86 லட்சம் ரூபாய் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.விவசாயிகளின் பணத்தை பட்டுவாடா செய்யவேண்டும். அதன்பிறகு மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளின் பொருட்களை கொள்முதல் செய்வதாகவும், அதுவரை மார்க்கெட்
வியாபாரிகள் வர மறுத்ததால் உளுந்துார்பேட்டை கமிட்டி மூடல்



உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டிக்கு வியாபாரிகள் வர மறுத்ததால் மூடப்பட்டது.உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 86 லட்சம் ரூபாய் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.விவசாயிகளின் பணத்தை பட்டுவாடா செய்யவேண்டும். அதன்பிறகு மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளின் பொருட்களை கொள்முதல் செய்வதாகவும், அதுவரை மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதில்லை என வியாபாரிகள் முடிவு செய்தனர்.இதனால் வியாபாரிகள் மார்க்கெட் கமிட்டிக்கு வராததால் நேற்று முதல் மார்க்கெட் கமிட்டி மூடப்பட்டது. திடீரென மார்க்கெட் கமிட்டி மூடப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.இருப்பினும் வியாபாரிகள் மற்றும் மார்க்கெட் கமிட்டி அதிகாரிகள் முன்கூட்டியே தெரிவிக்காததால் விவசாயிகள் தங்களுடைய பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி எடுத்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X