நேர்காணல் செய்யாத 1,836 ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை

Added : செப் 20, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலம் மூலம், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை நேர்காணல் செய்யப்படுவார்கள். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டில் நேர்காணல் நடைபெறாத நிலையில், இந்தாண்டு நேர்காணல் செய்யப்பட வேண்டும் என கருவூல அலுவலகம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலம் மூலம், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை நேர்காணல் செய்யப்படுவார்கள்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டில் நேர்காணல் நடைபெறாத நிலையில், இந்தாண்டு நேர்காணல் செய்யப்பட வேண்டும் என கருவூல அலுவலகம் தெரிவித்திருந்தது. இந்தாண்டு ஜூலை மாதம் முதல் செப்டம்பர் இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், காஞ்சி புரம் மாவட்டத்தில், ஓய்வூ தியம் பெறும் பலர் நேர் காணலில் பங்கேற்காமலும், வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்யாமலும் இருப்பது தெரியவந்துள்ளது.

மாவட்டத்தில் மொத்தம், 9,135 பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இதில், 1,836 பேர் இன்னும் நேர்காணல் செய்யாமலும், வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்யாமலும் உள்ளனர். ஓய்வூதியம் பெறுபவர்கள் தபால் துறை சேவையை பயன்படுத்தி, வீட்டிலிருந்தே வாழ்நாள் சான்று பதிவு செய்து, நேர்காணல் செய்யலாம் அல்லது அரசு 'இ- -சேவை' மையம் மூலமாகவும், ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாகவும் நேர்காணல் செய்யலாம்.இம்மாதம் 30ம் தேதிக்குள், நேர்காணல் செய்யாத ஓய்வூதியர்களுக்கு, ஓய்வூதியம் நிறுத்தப்படும் என, மாவட்ட கருவூல அலுவலர் அருள்குமார் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X