இரு தரப்பினர் மோதல் 12 பேர் மீது வழக்கு

Added : செப் 20, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே இரு தரப்பினைரிடையே ஏற்பட்ட தகராறில் 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை தாலுகா செம்மணங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசபெருமாள் மனைவி ரோஜா, 27; இவரது குடும்பத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வீரவேல் குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்ட முன்விரோதம் இருந்து



உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே இரு தரப்பினைரிடையே ஏற்பட்ட தகராறில் 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை தாலுகா செம்மணங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசபெருமாள் மனைவி ரோஜா, 27; இவரது குடும்பத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வீரவேல் குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்ட முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு திட்டி தாக்கி கொண்டனர்.இது குறித்து ரோஜா கொடுத்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் வீரவேல், வீரசந்திரன், வீரசெல்வம், குப்புசாமி, லலிதா, மணி ஆகிய 6 பேர் மீதும், வீரசெல்வன் கொடுத்த புகாரின்பேரில் வெங்கடேசபெருமாள், சந்தான பாரதி, சங்கர், தேவகி ரோஜா, விஷ்ணு ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X