கல்வராயன் மலையில் 570 லிட்டர் சாராயம் பறிமுதல் : 4 பேர் கைது

Added : செப் 20, 2022 | |
Advertisement
கச்சிராயபாளையம்-கல்வராயன் மலையில் 570 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி டி.எஸ்,பி., புகழேந்தி கனேஷ் உத்திரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமயைிலான தனிப்படை போலீசார் கல்வராயன் மலையில் நேற்று காலை சாராய ரெய்டு சென்றனர். அப்போது எழுத்துார் மாரியம்மன் கோவில் அருகே ஏழு பைக்குகளில் வந்த நபர்களை தடுத்தி நிறுத்தி சோதனை
கல்வராயன் மலையில் 570 லிட்டர் சாராயம் பறிமுதல் : 4 பேர் கைது



கச்சிராயபாளையம்-கல்வராயன் மலையில் 570 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி டி.எஸ்,பி., புகழேந்தி கனேஷ் உத்திரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமயைிலான தனிப்படை போலீசார் கல்வராயன் மலையில் நேற்று காலை சாராய ரெய்டு சென்றனர். அப்போது எழுத்துார் மாரியம்மன் கோவில் அருகே ஏழு பைக்குகளில் வந்த நபர்களை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் 19 லாரி டியூப்பு களில் 570 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இந்த சாராயம் சேலம் மாவட்டம், ஆத்துாருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. அதனை தொடர்ந்து 570 லிட்டர் சாராயம் மற்றும் 7 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் எழுத்துார் கிராமத்தை சேர்ந்த பாலு, 30; கருநெல்லி தீர்த்தமலை, 26; மேல் முருவம் சீனிவாசன் 60; கோவிந்தன், 26; ஆகிய நான்கு பேரை கரியாலுார் போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்து தப்பி சென்ற மேல்முருவம் சின்னதுரை, இளையராஜா, வண்டகாபடி தனபால், ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X