காஞ்சியில் யாத்திரி நிவாஸ் தங்கும் விடுதி; பராமரிப்பு பணிக்கு ஆட்கள் தேர்வு

Added : செப் 20, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் பழைமையான கோவில்கள் பல அமைந்துள்ளன. இதனால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகின்றனர். இதனால் மத்திய அரசு பாரம்பரிய நகரத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்த்து அதன் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல கோடி செலவில் நடந்த பணிகள் தற்போது பயனில்லாமல் போனது.இதையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் வருகையை
காஞ்சியில் யாத்திரி நிவாஸ் தங்கும் விடுதி; பராமரிப்பு பணிக்கு ஆட்கள் தேர்வு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் பழைமையான கோவில்கள் பல அமைந்துள்ளன. இதனால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகின்றனர். இதனால் மத்திய அரசு பாரம்பரிய நகரத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்த்து அதன் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பல கோடி செலவில் நடந்த பணிகள் தற்போது பயனில்லாமல் போனது.இதையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் வருகையை அதிகரிக்கும் வகையில் யாத்திரி நிவாஸ் அதாவது பக்தர்கள் தங்கும் விடுதி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் 24.65 கோடி ரூபாய் செலவில் கட்டும் பணி துவங்கியது. கடந்த ஆண்டு பணி நிறைவு பெற்று உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முதல் நாள் அப்போதய முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இருந்தும் சில வேலைகள் உள்ளன. இந்த யாத்திரி நிவாஸ் நடத்துவது யார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது சுற்றுலா வளர்ச்சி துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதனால் யாத்திரி நிவாஸ் தங்கும் விடுதியில் தனி அறைகள். ரெஸ்ட்ராரென்ட், கார் பார்க்கிங், வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் தங்கும் அறை, மொத்தமாக பக்தர்கள் தங்கும் அறை என பல வசதிகள் இங்கு உள்ளன. இந்த தங்கும் விடுதி திறக்கப்பட்டால் வெளியூர் பக்தர்கள் வருகை அதிகரிக்கும்.இவற்றை பராமரிக்க போதிய ஆட்கள் தேவைபடுவதால் நேற்று பணியாளர் தேர்வு நடந்தது. சுற்றுலா துறை அதிகாரி ஒருவர் மேற்பார்வையில் நடந்தது.

இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:யாத்திரி நிவாஸ் தங்கும் விடுதி சுற்றுலா துறையின் கீழ் பராமரிப்பு செய்யப்பட இருக்கிறது. தேர்வு செய்யப்படும் தற்காலிக பணியாளர்கள் தனியார் மூலம் வேலை செய்வர். இதில் காவலாளிகள், அறைகள் துப்புரவு செய்வோர், கண்காணிப்பாளர்கள் என மொத்தம், 70 பேர் தேவைப்படுகின்றனர். இந்த பணியாளர்கள் தேர்வு முடிந்ததும் அடுத்த மாதம் முறைப்படி திறக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X