மழை நீர் கால்வாயில் வெளியேறிய கழிவு நீர்

Added : செப் 20, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம், காந்தி சாலை - மடம் தெரு சந்திப்பு பகுதியில் பெய்யும் மழை நீர், மஞ்சள் நீர் கால்வாய் வழியாக வெளியேறும் வகையில் வள்ளல் பச்சையப்பன் தெருவில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.மழை நீர் செல்ல வேண்டிய கால்வாயில் சிலர் முறைகேடாக கழிவு நீர் இணைப்பு கொடுத்துள்ளனர். மேலும், கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக
மழை நீர் கால்வாயில் வெளியேறிய கழிவு நீர்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம், காந்தி சாலை - மடம் தெரு சந்திப்பு பகுதியில் பெய்யும் மழை நீர், மஞ்சள் நீர் கால்வாய் வழியாக வெளியேறும் வகையில் வள்ளல் பச்சையப்பன் தெருவில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

மழை நீர் செல்ல வேண்டிய கால்வாயில் சிலர் முறைகேடாக கழிவு நீர் இணைப்பு கொடுத்துள்ளனர். மேலும், கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரத்தில் பெய்த மழை காரணமாக, மழை நீர் செல்ல வேண்டிய கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, எதிர் திசையில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் குட்டை போல் தேங்கி உள்ளது.இதனால், அவ்வழியே செல்லும் பாதசாரிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், கழிவு நீர் கால்வாய் முகப்பு பகுதியில் பழமையான செல்வ விநாயகர் கோவில் நுழைவு வாயிலில் கழிவு நீர் தேங்கியுள்ளதால், கோவிலுக்குள் பக்தர்கள் சென்று வர முடியாத நிலை உள்ளது.இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மழை நீர் வடிகால்வாயில் முறைகேடாக கழிவு நீர் விடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மழை நீர் வெளியேறும் வகையில் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X