சொத்துகளை பறித்து விரட்டிய வாரிசுகள்; கருணை கொலை கோரி பெற்றோர் 'தர்ணா'

Added : செப் 20, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மயிலாடுதுறை, : சொத்துக்களை பறித்து, மகனால் கைவிடப்பட்ட வயதான தம்பதி கருணை கொலை செய்யக்கோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.மயிலாடுதுறை தாலுகா, கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கசாமி, 85; மனைவி சாரதாம்பாள், 75. இவர்களுக்கு நான்கு மகன்கள். அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர்.இவர், 2009ம் ஆண்டு மகன்கள் நான்கு பேருக்கும் தான் சம்பாதித்த
மயிலாடுதுறை, சொத்துக்கள், தம்பதி, கருணை கொலை, Mayiladuthurai, mercy killing,

மயிலாடுதுறை, : சொத்துக்களை பறித்து, மகனால் கைவிடப்பட்ட வயதான தம்பதி கருணை கொலை செய்யக்கோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.மயிலாடுதுறை தாலுகா, கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கசாமி, 85; மனைவி சாரதாம்பாள், 75. இவர்களுக்கு நான்கு மகன்கள். அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர்.

இவர், 2009ம் ஆண்டு மகன்கள் நான்கு பேருக்கும் தான் சம்பாதித்த சொத்தை பிரித்துக் கொடுத்தார். தனக்கென கொஞ்சம் நிலத்தையும், குடிசை வீட்டையும் ஒதுக்கி விவசாயம் செய்து வந்துள்ளார்.இந்நிலையில், சாரதாம்பாளுக்கு உடல்நலம் சரியில்லாத போது, சீர்காழி அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரியும் மூத்த மகன் உத்திராபதி ஏமாற்றி, தந்தையின் பாகத்தையும் எழுதி வாங்கிக் கொண்டுள்ளார்.பின், பெற்றோரை வீட்டில் இருந்து விரட்டியுள்ளார். இது குறித்து, தம்பதி பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்; நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், தாய், தந்தையை உத்திராபதி கொடுமைப்படுத்தி உள்ளார். தங்கசாமி தன் சொத்துக்களை பெரிய மகனுக்கு மட்டும் எழுதிக் கொடுத்து விட்டதால், அவரை பராமரிக்க மற்ற மகன்கள் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, அந்த தம்பதி அருகில் உள்ள வீட்டு வாசல்களிலும், பஸ் ஸ்டாண்டிலும் தங்கி முதுமை காலத்தை கழித்து வருகின்றனர்.இது குறித்து, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், பலன் இல்லை. தொடர்ந்து நேற்று, மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.போலீசார், அவர்களை குறைதீர் கூட்ட அரங்கிற்கு அழைத்துச் சென்றனர். பாதிக்கப்பட்ட தம்பதி, தங்களை கருணை கொலை செய்ய உத்தரவிட வேண்டுமென மனு அளித்தனர்.மனுவை பெற்ற கலெக்டர் லலிதா, மயிலாடுதுறை ஆர்.டி.ஓ.,விற்கு பரிந்துரை செய்து, மகன்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-செப்-202203:53:01 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இவர்கள் முன்வினையில் செய்த பாவம்.
Rate this:
Democracy - Madurai,இந்தியா
23-செப்-202220:35:05 IST Report Abuse
Democracyஇதெல்லாம் இவர்கள் முன்வினையில் செய்த பாவம். அப்படித் தான் சனாதனம் சொல்லுது. இந்தியாவில் சமுதாய பாதுகாப்பின்மைக்கு அடிநாதம் அது தான். எல்லாம் நீ செஞ்ச பாவம் என்று அடிப்படை பிரச்சினையை மறைப்பது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X