ரூ.108 கோடி செலவில் செங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தரம் உயர்வு!

Updated : செப் 20, 2022 | Added : செப் 20, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை தரம் உயர்த்தி, பல்நோக்கு மருத்துவமனையாக மேம்படுத்த, 108 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்க திட்டமிட்டு, அரசுக்கு மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரை செய்து உள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உள்ளது.இம்மருத்துவமனையில் செங்கல்பட்டு மட்டும்
செங்கை மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, செங்கல்பட்டு, Chengai Medical College, Hospital, Chengalpattu,

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை தரம் உயர்த்தி, பல்நோக்கு மருத்துவமனையாக மேம்படுத்த, 108 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்க திட்டமிட்டு, அரசுக்கு மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரை செய்து உள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உள்ளது.இம்மருத்துவமனையில் செங்கல்பட்டு மட்டும் இன்றி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். இம்மருத்துவமனை, 1965ம் ஆண்டு துவங்கப்பட்டது.அரசு மருத்துவக்கல்லுாரியில், 100 மாணவர்கள் படிக்கின்றனர். மருத்துவமனையில், 1,200 படுக்கைகள் உள்ளன. இங்கு தினமும், உள்நோயாளிகள் 1,000க்கும் மேற்பட்டவர்களும், புறநோயாளிகள் 3,000க்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெறுகின்றனர்.சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, நெடுஞ்சாலை மாவட்ட சாலைகள் மற்றும் மகேந்திரா சிட்டி, மறைமலை நகர், ஒரகடம் ஆகிய பகுதிகளில், தொழிற்சாலைகள் உள்ளன.கோரிக்கை

சாலை விபத்து மற்றும் தொழிற்சாலை விபத்துக்களில் சிக்குபவர்களை இங்கு சேர்க்கின்றனர். இதில், தலையில் பலத்த காயமடைந்தவர்களுக்கு உடனடியாக, சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயமடைந்தவர்களுக்கு, இங்கு சிகிச்சை அளிக்க முடியாததால், சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய சூழல் உள்ளது.இந்த மருத்துவமனையை, பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் நீண்டகாலமாக அரசிடம் கோரிக்கை வைத்து வலியுறுத்தி வருகின்றனர்.latest tamil news


இதையேற்று, பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த 2015 - 16ம் ஆண்டு, 65 கோடி ரூபாய் நிதி கேட்டு, சென்னை மருத்துவக்கல்லுாரி இயக்குனர் மூலம், மருத்துவமனை நிர்வாகம் அரசுக்கு கருத்துரு அனுப்பியது.அதன்பின் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தொடர்ந்து, பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த, 90 கோடி ரூபாய் நிதி கேட்டு, சென்னை மருத்துவக்கல்லுாரி இயக்குனர் மூலம், அரசுக்கு, மருத்துவமனை நிர்வாகம் கருத்துரு அனுப்பி உள்ளது.இதற்கிடையில், தலைகாய சிகிச்சை பிரிவிற்காக, மத்திய சுகாதாரத் துறை,, 18 கோடி ரூபாய், ஆகஸ்ட் மாதம் நிதி ஒதுக்கீடு செய்தது.எனவே, பொதுமக்கள் நலன் கருதி, பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த, முதல்வர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.
பரிந்துரை


இதுகுறித்து, மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை, பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த, அரசு மருத்துவக்கல்லுாரி இயக்குனர் மூலம், 90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை அனுப்பி உள்ளது. இத்திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்த நிதி மற்றும் மத்திய அரசு ஒதுக்கிய 18 கோடி ரூபாய் உடன், பணிகள் துவக்கப்பட உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமும் 3,000 பேர் சிகிச்சை

அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு வரும் 3,000 பேரில், 500க்கும் மேற்பட்டவர்கள், இருதய நோய், சிறுநீரக பிரச்னை உள்ளிட்ட சிகிச்சைக்காக வருகின்றனர். சாலை விபத்துக்களில் அடிபட்டு வருபவர்களில், படுகாயமடைந்தவர்கள், மேல் சிகிச்சைக்காக, சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.


நிலம் ஒதுக்கீடு

அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், பல்நோக்கு மருத்துவமனை அமைக்க, இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து நவீன வசதிகளுடன் அமைய உள்ளது. இந்த மருத்துவமனை அமைந்தால், இங்கேயே சிகிச்சை பெற முடியும்.


அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், பல்நோக்கு மருத்துவமனை அமைக்க, இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து நவீன வசதிகளுடன் அமைய உள்ளது. இந்த மருத்துவமனை அமைந்தால், இங்கேயே சிகிச்சை பெற முடியும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-செப்-202207:42:31 IST Report Abuse
ராஜா கட்டுமர மருத்துவமனை என்று பெயர் மாற்றம் மட்டுமே செய்தால் தரம் உயர்ந்து விடும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
20-செப்-202220:32:29 IST Report Abuse
Ramesh Sargam தரம் மட்டும் உயர்த்த இவ்வளவு பணமா? எங்கோ உதைக்கிறதே. போகட்டும். தரம் உயர்ந்தால் மகிழ்ச்சி.
Rate this:
Cancel
20-செப்-202216:47:10 IST Report Abuse
N SASIKUMAR YADHAV புதியதாக கட்டுவதற்கே அவ்வளவு செலவாகாதே . அப்புறம் எப்படி இதற்காக இவ்வளவு செலவு . 50/50 கமிஷன் இருக்க வாய்ப்புண்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X