மூத்த தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சிக்கு முழுக்கு: திமுக அதிர்ச்சி

Updated : செப் 21, 2022 | Added : செப் 20, 2022 | கருத்துகள் (88) | |
Advertisement
சென்னை: தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்பி. சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2009 ல் எனது எம்பி., பதவி முடிந்ததும் நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் கட்சி பணியை மட்டும் தொடர்வதாக அப்போதைய தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்திருந்தேன். தொடர்ந்து 2021 தேர்தலில் அரும் பணியாற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்பி. சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.latest tamil newsஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2009 ல் எனது எம்பி., பதவி முடிந்ததும் நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் கட்சி பணியை மட்டும் தொடர்வதாக அப்போதைய தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்திருந்தேன். தொடர்ந்து 2021 தேர்தலில் அரும் பணியாற்றி முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். இவர் மக்கள் போற்றும் வகையில் ஆட்சி புரிந்து வருகிறார். இந்த மன நிறைவோடு நான் எனது நீண்ட கால ஆசையை நிறைவேற்றி கட்சி பொறுப்பில் ( திமுக துணை பொது செயலர் ) இருந்து விலகி கொள்கிறேன்.latest tamil newsஇதற்கான கடிதத்தை ஆக.29 ம் தேதி ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்து விட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பொறுப்பில் இருந்தும் அவர் விலகி கொள்கிறார்.
கணவர் காரணமா?


சுப்புலட்சுமி கணவர் ஜெகதீசனும் தி.மு.க., காரர். சமீபகாலமாக மனைவிக்கு கட்சியில் முக்கியத்துவம் குறைந்ததால், கடுப்பான கணவர் ஜெகதீசன் தி.மு.க.,வையும், கட்சி தலைமையையும் கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் எழுதி கொண்டிருந்தார்.கணவரின் விமர்சனத்திற்கு சுப்புலட்சுமி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எனவே, சுப்புலட்சுமியின் சம்மதத்தோடு தான் ஜெகதீசன் விமர்சனங்களை செய்து வந்ததாக கூறப்படுகிறது. கட்சி மீது தனக்கு இருந்த அதிருப்தியை கணவர் மூலம் சுப்புலட்சுமி காட்டியதாக கட்சியினர் பேசிக்கொண்டனர்.இனிமேல், தி.மு.க.,வில் தனக்கு எதிர்காலம் இருக்காது என்று, நன்கு தெரிந்ததால் தான் சுப்புலட்சுமி கட்சிக்கு முழுக்கு போட்டுள்ளார் என்று தி.மு.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.தி.மு.க., ஆளுங்கட்சியாக இருக்கும் நேரத்தில், ஆளுங்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பதவி விலகியது அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-செப்-202209:59:51 IST Report Abuse
soundar rajan நீ ஒரு உண்மையை புரிஞ்சிக்க தெரியா........
Rate this:
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
21-செப்-202209:14:00 IST Report Abuse
sankar may be she should have thought that she is not a pros as raja said thats why moving out of the party . those who believes raja words continuing the party including stalin family
Rate this:
Cancel
21-செப்-202207:20:02 IST Report Abuse
எவர்கிங் .....காலத்தில் சங்கரா சங்கராதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X