ஹிந்துக்களுக்கு எதிராக ஆ.ராசா கக்கிய விஷம்: மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று விஷமம்

Updated : செப் 20, 2022 | Added : செப் 20, 2022 | கருத்துகள் (143) | |
Advertisement
சென்னை: திமுக எம்.பி., ஆ.ராசா தொடர்ந்து ஹிந்துக்கள் குறித்தும் ஹிந்து மதம் குறித்தும் விஷமமான கருத்துகளை தெரிவித்து வருகின்றார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தும் அவர் தனது பேச்சுக்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்பதில்லை. மாறாக மீண்டும் ஹிந்துக்கள் குறித்து அவதூறு பரப்புவதையே தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் ‛ஹிந்துக்களாக இருப்பவர்கள் விபசாரியின்
ARaja, DMK, Hindu, MP, ஆராசா, திமுக, ஹிந்து, எம்பி, ஹிந்துக்கள், எதிரி, பிராமணர்கள், சர்ச்சை, மன்னிப்பு, விஷமம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: திமுக எம்.பி., ஆ.ராசா தொடர்ந்து ஹிந்துக்கள் குறித்தும் ஹிந்து மதம் குறித்தும் விஷமமான கருத்துகளை தெரிவித்து வருகின்றார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தும் அவர் தனது பேச்சுக்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்பதில்லை. மாறாக மீண்டும் ஹிந்துக்கள் குறித்து அவதூறு பரப்புவதையே தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் ‛ஹிந்துக்களாக இருப்பவர்கள் விபசாரியின் மகன்' என்றெல்லாம் பேசினார். இதற்கு திமுக தலைமையோ, கூட்டணி கட்சிகளோ மவுனம் காக்கின்றன.
மன்னிப்பு


இந்த நிலையில் தற்போது தி.மு.க இலக்கிய அணி சார்பில் சென்னையில் நேற்று (செப்.,19) நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஆ.ராசா பேசியதாவது: ஆ.ராசா ஹிந்துக்களை புண்படுத்திவிட்டார், இதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கின்றனர். மன்னிப்பு கேட்பது பெரிய விஷயமல்ல. மன்னிப்பு கேட்க மாட்டேன் என்பவன் முட்டாள், வறட்டுத்தனமான அயோக்கியன். எனவே நான் மன்னிப்பு கேட்க தயார்.. என்ன மன்னிப்பு கேட்க வேண்டும்.. இது குறித்து நல்ல விவாதம் எல்லாம் வைக்கின்றனர். பா.ஜ.,வின் திருப்பதி நாராயணன் என்பவர் நல்லவொரு விவாதத்தை முன்வைத்தார், அதை மதிக்கிறேன். ஹிந்து மதத்தில் சொன்னதெல்லாம் உண்மைதான், ஆனால் இப்போது அது ஹிந்து மதத்தில் இல்லை. அம்பேத்கர் ஹிந்து மத சட்டம் கொண்டுவந்ததற்கு பிறகு ராசா சொல்வது பொருந்தாது, அது ஹிந்துக்களை இழிவுப்படுத்துகிறது என அவர் கூறியுள்ளார்.
ஹிந்துக்களுக்கு எதிரியா?


latest tamil news


நான் 2ஜி.,யவே பார்த்தவன், இந்த தில்லாலங்கடி வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்க கூடாது. நான் ஏன் ஹிந்து மதத்தை பற்றி அப்படி பேசினேன் என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள். ஹிந்துக்களுக்கு ராசா எதிரியா? கருணாநிதி எதிரியா? அல்லது நீங்கலெல்லாம் எதிரியா? 1951ல் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தமிழகத்தில் ஈ.வெ.ரா கொண்டு வந்தார். இடஒதுக்கீடு இருந்தது. அது வேண்டாம் என இரு பிராமணர்கள் உச்சநீதிமன்றத்திற்கு சென்றனர். நீதிமன்றமும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு செல்லாது என்றது. இதில், யார் பிற்படுத்தப்பட்டவர்கள்? கவுண்டர், தேவர், நாடார், யாதவர், வன்னியர், செட்டியார், நாயுடு இவர்கள் தானே..இவர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என கேட்டவர்கள் யார்? ஈ.வெ.ரா, அண்ணாதுரை. 60 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளோரை ஹிந்துக்கள் என்கின்றனர். அந்த ஹிந்துக்களுக்காக உச்சநீதிமன்றத்தில் போராடி இடஒதுக்கீடு பெற்றுத்தந்தது திமுக.,வும், திராவிடர் கழகமும் தான். தாழ்த்தப்பட்டவர்களுக்கு அம்பேத்கர் 1946ல் ஆங்கிலேயர்களிடமே வாங்கிவிட்டார். இப்போது நான் பேசுவது எல்லாம் ஹிந்து மதத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்டவர்கள் பற்றி. நான் மேலே சொன்ன சாதிகள் எல்லாம் ஹிந்து தானே.. இவர்களுக்காக தானே இடஒதுக்கீடு கேட்டோம்! இதை எதிர்த்தவர்கள் யார்? எதிர்த்தவர்கள் பிராமணர்களும், ரஜபுத்திரர்களும், மேல் சாதியினரும் தான். அவர்களும் ஹிந்துக்கள் தான்.latest tamil newsஹிந்துவிலே இரண்டு வகை


அப்போ ஹிந்துக்களாக இருக்க கூடிய பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வேண்டாம், உரிமை வேண்டாம் என சொன்ன ஹிந்து யார்? இவனும் ஹிந்து, அவனும் ஹிந்து. நான் இந்த தேசத்திற்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். ஹிந்துவிலே இரண்டு வகை. இதை நான் சொல்லவில்லை, தமிழக கவர்னர் சொல்கிறார். மாநிலத்தின் கவர்னராக இருந்து அரசியல் சட்டத்தை காப்பாற்றுவேன் என உறுதிமொழி ஏற்றார். அப்படியெனில் அவர் பேசும், சனாதனம் எங்கிருந்து வந்தது? இப்போது திருப்பதி நாராயணனின் கூற்றுக்கு வருவோம். அரசியல் சட்டம் இயற்றப்பட்ட பிறகு மனுஸ்மிருதி இல்லை, சனாதனம் இல்லை என அவர் கூறியுள்ளார். அப்போ சனாதனம், தர்மம் பேசும் ஹிந்து வேறு, அரசியல் சட்டம் சொல்லும் ஹிந்து வேறு. இவ்வாறு அவர் பேசியுள்ளார். ராசாவின் இந்த பேச்சும் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (143)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil Kumar - chennai,இந்தியா
21-செப்-202215:20:46 IST Report Abuse
Senthil Kumar வாய்மையே வெல்லும்
Rate this:
Cancel
Vijay - Chennai,இந்தியா
20-செப்-202223:41:08 IST Report Abuse
Vijay அ ராசா விவகாரத்தில் என்ன செய்ய எவ்வளவு பட்டாலும் ஹிந்துக்களுக்கு சூடு சுரனை வருவதில்லையே.
Rate this:
Cancel
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
20-செப்-202222:07:10 IST Report Abuse
T.Senthilsigamani ஆண்டிபட்டி ராசா திருந்தப்போவது இல்லை .அது போல திமுகவில் உள்ள ஹிந்துக்களும் திருந்தப்போவது இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X