பிரிட்டன் ராணியின் இறுதிச் சடங்கில் தேசிய கீதம் பாடாத இளவரசர் ஹாரி?

Updated : செப் 21, 2022 | Added : செப் 20, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
லண்டன்: உடல்நலக்குறைவால் காலமான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது, 'காட் சேவ் தி கிங்' என்ற பிரிட்டனின் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது அரச குடும்பத்தினருடன் இணைந்து இளவரசர் ஹாரி பாடவில்லை எனக்கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் வெஸ்ட் மினிஸ்டர்
britain, Prince_Harry, Sing,  Queen's Funeral, God Save The King,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லண்டன்: உடல்நலக்குறைவால் காலமான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது, 'காட் சேவ் தி கிங்' என்ற பிரிட்டனின் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது அரச குடும்பத்தினருடன் இணைந்து இளவரசர் ஹாரி பாடவில்லை எனக்கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் வெஸ்ட் மினிஸ்டர் ஹாலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் முழு அரசு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டன. பின் வின்ஸ்டர் அரண்மனையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் உள்ள அவரது கணவர் இளவரசர் பிலிப் மற்றும் பெற்றோரது கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.

அதற்கு முன்னர், தேவாலயத்தில் உடல் வைக்கப்பட்டிருந்த போது, மன்னர் சார்லஸ் மற்றும் அரச குடும்பத்தினர் வந்தனர். அப்போது 'காட் சேவ் தி கிங்' என்ற பிரிட்டனின் தேசிய கீதம் பாடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.


latest tamil news
அப்போது, அரசு குடும்பத்தினர் தேசிய கீதத்தை பாடுகையில், இளவரசர் ஹாரி மட்டும் பாடவில்லை எனக்கூறப்படுகிறது. இது தொடர்பாக வீடியோ கிளிப்பும் சமூக வலைதளங்களில் பரவ துவங்கியது. இதனை பார்த்த நெட்டிசன்கள், ஹாரியை விமர்சிக்க துவங்கினர். அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக ஹாரியை விமர்சித்தனர். ஆனால், சிலர் மட்டும் ஹாரி தேசிய கீதம் பாடியதாக ஆதரவாக கருத்து பதிவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
21-செப்-202204:57:02 IST Report Abuse
NicoleThomson சூத்திரன் என்று ஒரு சாராரை அசிங்கமா திட்டி கொண்டிருக்கும் எம்மதத்தாரே , நீங்க மெச்சும் எம் கிறிஸ்துவத்தில் நடக்கும் கூத்துகளுக்கு எடுத்துக்காட்டு உங்கள் கண்முன்னே அந்த இளைஞன் திருமணம் செய்தது ஒரு பெண்ணைத்தான் ? ஆனால் அவள் கரிய நிறத்தவள் என்பதால் எவ்வளவு கொடுமைகள் இழிபேச்சுகள் , ஆனாலும் டேஷ் தின்னும் ராசா , திருமா போன்றோரின் கருத்தை அறிய ஆவலாய் உள்ளேன்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
20-செப்-202222:54:52 IST Report Abuse
Ramesh Sargam ஒருவேளை பாட்டு மறந்திருக்கும் அல்லது பாடமுடியாதபடி துக்கம் அவர் தொண்டையை அடைத்திருக்கும்.
Rate this:
Cancel
Yogeshananda - Erode,இந்தியா
20-செப்-202218:53:12 IST Report Abuse
Yogeshananda இத்தனை ஆர்ப்பாட்டமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X