மீண்டும் அரசியலில் குதிக்கிறாரா நடிகர் சிரஞ்சீவி?: புதிய ஆடியோவால் பரபரப்பு

Updated : செப் 21, 2022 | Added : செப் 20, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
ஐதராபாத்: நடிகர் சிரஞ்சீவி அரசியல் கட்சி துவங்கி பின்னர் அதனை காங்கிரசுடன் இணைத்து அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் திரைப்படங்களில் நடித்துவரும் அவர், ‛அரசியலில் இருந்து விலகி இருந்தாலும், அரசியல் என்னை விட்டு விலகவில்லை' என பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்துவரும் சிரஞ்சீவி கடந்த 2008ல் ‛பிரஜா
Politics, Never Left, Chiranjeevi, சிரஞ்சீவி, அரசியல், ஆடியோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஐதராபாத்: நடிகர் சிரஞ்சீவி அரசியல் கட்சி துவங்கி பின்னர் அதனை காங்கிரசுடன் இணைத்து அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் திரைப்படங்களில் நடித்துவரும் அவர், ‛அரசியலில் இருந்து விலகி இருந்தாலும், அரசியல் என்னை விட்டு விலகவில்லை' என பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்துவரும் சிரஞ்சீவி கடந்த 2008ல் ‛பிரஜா ராஜ்யம்' என்ற கட்சியை துவக்கினார். 2009ல் நடந்த தேர்தலில், 20 சதவீத ஓட்டுகளைப் பெற்ற சிரஞ்சீவி, 18 தொகுதிகளில் வெற்றி பெற்றார். பலேகால், திருப்பதி என இரு தொகுதிகளில் போட்டியிட்ட சிரஞ்சீவி, சொந்த ஊரான பலேகால் தொகுதியில் தோல்வியடைந்தார்.

திருப்பதி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். தேர்தலுக்கு பிறகு அடுத்த சில ஆண்டுகளில் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக்கொண்டதுடன் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரானார். 2014ம் ஆண்டுடோடு அரசியலிலிருந்து முழுவதுமாக விலகினார். தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் பிசியாக உள்ளார்.


latest tamil news


சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான பவன் கல்யாணும் அரசியலில் குதித்தார். ‛ஜனசேனா' என்ற புதிய கட்சியைத் துவங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‛அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன். ஆனால், அரசியல் என்னை விட்டு விலகவில்லை' எனப் பேசியுள்ளார். இந்த ஆடியோவால் சிரஞ்சீவி ஏதேனும் கட்சியில் இணையப்போகிறாரா அல்லது தனது சகோதரரின் கட்சிக்காக பிரசாரம் செய்யப் போகிறாரா அல்லது ஜெகன்மோகன் கட்சிக்கோ பா.ஜ.,வுக்கோ பிரசாரம் செய்யப் போகிறாரா என்ற பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சிரஞ்சீவி நடித்துள்ள ‛காட்பாதர்' படம் அரசியல் கலந்த திரில்லர் கதையில் உருவாகியுள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்காக கூட சிரஞ்சீவி, இந்த அரசியல் வசனம் பேசியிருக்கலாம் எனவும் ஒருசிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இருந்தாலும், சிரஞ்சீவியின் இந்த ஆடியோ ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்பு - தஞ்சை,கனடா
21-செப்-202201:55:23 IST Report Abuse
அன்பு இவரது படங்கள் ஓடவில்லை. அதற்காக திரும்ப அரசியல் பூச்சாண்டி காட்டுகிறார். அரசியலுக்கு வருவேன் என்று சொன்னால், இவர் முதல்வர் ஆனால், ரசிகர்கள் மந்திரிகள் ஆகி கொள்ளையடிக்கலாம் என்று கனவில் மிதந்து, தியேட்டருக்கு வந்து இவரது படத்தை பார்ப்பார்கள். எல்லாம் ஒரு பிசினஸ் ஐடியா தான். முட்டாள் ரசிகர்களை ஏமாற்றி நிறைய சம்பாரிக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
20-செப்-202220:16:48 IST Report Abuse
Ramesh Sargam இப்ப எல்லாம் நடிகர்கள் பட வாய்ப்பு அதிகம் இல்லை என்றால், உடனே அரசியலில் குதித்து சம்பாதிக்க பார்க்கிறார்கள். பண ஆசை யாரையும் விட்டுவைப்பதில்லை.
Rate this:
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
20-செப்-202219:45:14 IST Report Abuse
Narayanan Muthu ஆந்திர ரஜினி - அரசியல் கோமாளி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X