சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் ஏழை பெற்றோர் ரத்தக்குழாயில் அடைப்பு, வலிப்பு நோயால் பாதிக்கப்படும் சிறுவன்

Added : செப் 20, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
குளித்தலை:ரத்தக்குழாயில் அடைப்பு, வலிப்பு நோய், கண் கருவிழி பாதிப்பு அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வழியின்றி தவிக்கும் ஏழை சிறுவனுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்ற தமிழக அரசும், நல்ல உள்ளங்களும் முன்வர வேண்டும்.கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த, தோகைமலை பஞ்., நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் பாலன்,40; பந்தல் அமைக்கும் கூலி தொழிலாளி. அவரது மனைவி சிறும்பாயி,
சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் ஏழை பெற்றோர் ரத்தக்குழாயில் அடைப்பு, வலிப்பு நோயால் பாதிக்கப்படும் சிறுவன்

குளித்தலை:ரத்தக்குழாயில் அடைப்பு, வலிப்பு நோய், கண் கருவிழி பாதிப்பு அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வழியின்றி தவிக்கும் ஏழை சிறுவனுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்ற தமிழக அரசும், நல்ல உள்ளங்களும் முன்வர வேண்டும்.
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த, தோகைமலை பஞ்., நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் பாலன்,40; பந்தல் அமைக்கும் கூலி தொழிலாளி. அவரது மனைவி சிறும்பாயி, 39.இவர்களுக்கு கோபிநாத், 16, என்ற மகனும், விஜயலட்சுமி, 17, என்ற மகளும் உள்ளனர்.
தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார் கோபிநாத். சில ஆண்டுகளுக்கு முன், அவருக்கு திடீர் உடல் நல குறைவால், திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர்.


வலிப்பு


அப்போது, ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதாக கூறி, தொடர் மருத்துவம் மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.இதையடுத்து பாலன் குடும்பத்தினர், கோபிநாத்தை கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துஉள்ளனர்.
அதன் பிறகும் கோபிநாத்துக்கு அவ்வப்போது வலிப்பு ஏற்பட்டதால், திருச்சி, மதுரை என பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து உள்ளனர்.இதற்காக தங்களிடமிருந்த, நிலம், நகைகள் என அனைத்தையும் விற்று, 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். தற்போது வரை அவரது உடல்நலம் சீராகவில்லை.


நல்ல உள்ளங்கள்


தற்போது பணமில்லாமல், கோபிநாத்திற்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் வீட்டில் வைத்து கவனித்து வருகின்றனர்.இந்நிலையில், கோபிநாத்துக்கு சமீபத்தில் மீண்டும் வலிப்பு ஏற்பட்டு, அதன் பக்கவிளைவால் அவரது கண் கருவிழி மேலே ஏறிவிட்டது. அவரது கண் பகுதியில் கட்டு போடப்பட்டு, பார்வை இழந்து, மிகவும் பரிதாபமான நிலையில உள்ளார்.நன்றாக பேசிக் கொண்டிருந்த கோபிநாத் தற்போது, ஏதும் பேச முடியாமல், எதை கேட்டாலும் பதில் செல்லாமல், படுத்தபடுக்கையாக இருப்பது அவரது குடும்பத்தினரை மிகுந்த வேதனைக்கு ஆளாக்கி உள்ளது.
மணப்பாறை தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் பயின்று வந்த அவரது மூத்த சகோதரி, தற்போது படிப்பை விட்டு, தம்பியின் அருகில் இருந்து கவனித்து வருகிறார். வேலைக்கு சென்றால் தான் ஒரு வேளை உணவு என்ற நிலையில், தந்தை, தாய், அக்கா என மூவரும் வீட்டில் முடங்கி, கோபிநாத்தை கவனித்து வருகின்றனர். இதனால் அவர்களும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கோபிநாத்தின் அக்கா விஜயலட்சுமி கூறுகையில், ''இதுபோன்ற விசித்திரமான நோய்களால் பாதிக்கப்பட்ட பலரையும் அழைத்துச் சென்று உயரிய சிகிச்சை அளித்து குணப்படுத்தி, மீண்டும் இயல்பு நிலையில் வாழும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ''அதுபோன்று, என் தம்பிக்கும் மருத்துவ சிகிச்சை அளித்து, நாங்கள் இருவரும் தடையின்றி கல்வியை தொடர, அரசு எங்களுக்கு உதவ வேண்டும்,'' என்றார்.
தந்தை பாலன் கூறுகையில், ''இதற்கு மேலும் விற்பதற்கு என்னிடம் ஏதுமில்லை. எப்படியாவது என் மகனை காப்பாற்றுங்கள்,'' என்று கணணீர் மல்க கூறினார்.ஏழை மாணவன் கோபிநாத்துக்கு உரிய சிகிச்சை அளிக்க, அரசு நடவடிக்கை ‍எடுக்க வேண்டும். ஏழை குடும்பத்துக்கு உதவவும், சிறுவனை காப்பாற்றவும் உதவ நினைக்கும்
நல்ல உள்ளங்கள், 85250 10971 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishna - chennai,இந்தியா
21-செப்-202217:31:15 IST Report Abuse
krishna கொடுக்கப்பட்ட ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X