'ஆதார்' வழி சரிபார்ப்பு வசதி பத்திரப்பதிவில் நிறுத்தம்?

Added : செப் 20, 2022 | |
Advertisement
சென்னை:பத்திரப்பதிவுக்கு வருவோரின் அடையாளத்தை, 'ஆதார்' வழி சரிபார்க்கும் வசதி நிறுத்தப்பட்டு உள்ளதாக, புகார் எழுந்துள்ளது.பத்திரப் பதிவுக்கு வரும் நபர்களின் உண்மையான அடையாளத்தை சரிபார்ப்பது, அதற்கான 'பயோமெட்ரிக்' விபரங்களை சேகரிப்பது கட்டாயம். இத்துடன் கூடுதலாக, ஆதார் எண் அடிப்படையில், பதிவுக்கு வரும் நபரின் உண்மையான அடையாளத்தை உறுதி செய்ய, பதிவுத் துறை

சென்னை:பத்திரப்பதிவுக்கு வருவோரின் அடையாளத்தை, 'ஆதார்' வழி சரிபார்க்கும் வசதி நிறுத்தப்பட்டு உள்ளதாக, புகார் எழுந்துள்ளது.பத்திரப் பதிவுக்கு வரும் நபர்களின் உண்மையான அடையாளத்தை சரிபார்ப்பது, அதற்கான 'பயோமெட்ரிக்' விபரங்களை சேகரிப்பது கட்டாயம். இத்துடன் கூடுதலாக, ஆதார் எண் அடிப்படையில், பதிவுக்கு வரும் நபரின் உண்மையான அடையாளத்தை உறுதி செய்ய, பதிவுத் துறை திட்டமிட்டது.

பத்திரப்பதிவுக்கான இணையதளத்தில், இதற்கான வசதியை ஏற்படுத்தப்பட்டது.முதல் கட்டமாக, சென்னை மண்டலம் உள்ளிட்ட சில பகுதிகளில், 100 அலுவலகங்களில் இந்த வசதி கட்டாயமாக்கப்பட்டது. பின், இந்த வசதி மேலும், 135 அலுவலகங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கும், இதை விரிவுபடுத்தும் பணி நடக்கிறது. இதனால், ஆள்மாறாட்டம் வாயிலாக சொத்து அபகரிப்பு மோசடிகள் தடுக்கப்படும் என, நம்பிக்கை எழுந்தது.

இது, பதிவுத் துறை மீதான நம்பகத் தன்மையை உயர்த்தும் வகையில் அமைந்து இருந்தது. இந்நிலையில், இந்த வசதி நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து, சார் பதிவாளர்கள் கூறியதாவது:பத்திரப்பதிவில் ஆள்மாறாட்டத்தை தடுக்க, ஆதார் வழி சரிபார்ப்பு பேருதவியாக இருந்தது. பொது மக்களும் இதற்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வந்தனர்.'ஆன்லைன்' பத்திரப்பதிவு 'சர்வரில்' சமீபத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்யும் பணிக்கு பின், இந்த வசதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இதனால், பதிவின்போது, ஆதார் வழி சரிபார்ப்பு கட்டாயம் என்ற நிலை தற்போது மாறியுள்ளது. இதை பயன்படுத்தி மோசடி நபர்கள், ஆள்மாறாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இதை சரி செய்வது குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X