'சட்ட அறிவை ஏழைகளுக்காக பயன்படுத்துங்கள்!'

Updated : செப் 21, 2022 | Added : செப் 20, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை:' 'சட்ட அறிவை, வாதத் திறனை, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக பயன்படுத்த வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை, பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை வெள்ளி விழா நடந்தது. வெள்ளி விழா கல்வெட்டை திறந்து வைத்து, விழா மலரையும், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். பின், அவர் பேசியதாவது: கடந்த 1997ல் முதல்வராக இருந்த
'சட்ட அறிவை ஏழைகளுக்காக பயன்படுத்துங்கள்!'

சென்னை:' 'சட்ட அறிவை, வாதத் திறனை, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக பயன்படுத்த வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை வெள்ளி விழா நடந்தது. வெள்ளி விழா கல்வெட்டை திறந்து வைத்து, விழா மலரையும், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். பின், அவர் பேசியதாவது:

கடந்த 1997ல் முதல்வராக இருந்த கருணாநிதியால், சட்டக் கல்விக்காக தெற்காசியாவில் முதன்முதலாக இந்த சட்டப் பல்கலை துவங்கப்பட்டது. அம்பேத்கரின் பெயரில், சட்டப் பல்கலை நிறுவிய முதல் மாநிலம், தமிழகம் தான். வெறும் 40 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலை, தற்போது 4,500 மாணவர்களைக் கொண்டிருக்கிறது.

அனைத்து தரப்பினருக்கும் தரமான உயர் கல்வி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்' என்ற பாரதியின் கூற்றுக்கேற்ப, அம்பேத்கர் சட்டப் பல்கலை கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளியில், 70 சதவீதத்திற்கு மேல், மாணவியரே சட்டம் பயின்று வருகின்றனர்.

அகில இந்திய அளவில் நிர்வாகப் பொறுப்புகளில் பெண்கள் துணை நின்று பணியாற்றுவதும், நீதிபதிகளாக நீதி வழங்கி வருவதும், இந்தப் பல்கலை பெருமிதம் அடையும்தருணமாக பார்க்கிறேன்.உங்களது சட்ட அறிவை, வாதத் திறனை, ஏழை, எளிய,- ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக பயன்படுத்த வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கிக் கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளைக் காக்க, உங்களது கல்வியை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

சமத்துவ உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, எண்ணங்களை வெளியிடும் உரிமை, ஒன்று கூடும் உரிமை, பணிகள் செய்யும் உரிமை, மத சுதந்திரம், கல்வி உரிமை, சொத்துரிமை பாதிக்கப்பட்டால், அதற்கு தீர்வு காணக்கூடிய உரிமை ஆகிய பல்வேறு உரிமைகளை, அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அவற்றை காக்கும் வழக்கறிஞர்களாக நீங்கள் திகழ வேண்டும்.

சட்ட நீதியை மட்டுமல்ல,- சமூக நீதியையும் நிலைநாட்டக் கூடியவர்களாக நீங்கள் விளங்க வேண்டும். 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற சமூக நீதித் தத்துவத்தை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை, நாம் நடத்தி வருகிறோம். மக்களுக்கு இன்றைய தேவை என்பது, நீதி மட்டும் தான். அத்தகைய நீதியின் துாதுவர்களாக சட்டம் படிக்கும் நீங்கள் எதிர்காலத்தில் திகழ வேண்டும். சட்டப் புத்தகங்களையும் தாண்டி, இந்த சமூகத்தையும் பாடமாக நீங்கள் படிக்க வேண்டும். நீதிக்கு வெற்றி தேடித் தரும் வழக்கறிஞர்களாக நீங்கள் விளங்க வேண்டும் இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில், சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மஸ்தான், உயர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ், முன்னாள் நீதிபதி கிருபாகரன், சட்டப் பல்கலை துணை வேந்தர் சந்தோஷ்குமார், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
21-செப்-202216:55:00 IST Report Abuse
DVRR இடம் பொருள் ஏவல் சொல்பவர் தகுதி அவர் செய்யும் செயல்கள் இதை பொறுத்து அவரின் சொற்கள் மதிப்பு கணிக்கப்படும்
Rate this:
Cancel
Nakkeeran - Hosur,இந்தியா
21-செப்-202212:44:19 IST Report Abuse
Nakkeeran எல்லோரும் அரசியலுக்கு வருவதே பணம் சம்பாதிக்கத்தான் என்பது போல படித்த வக்கீலேல்லாம் ஏழைகளுக்கு இலவசமாக உதவினால் அவர்கள் வயித்து பிழைப்பு என்னாவது
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
21-செப்-202207:24:14 IST Report Abuse
Dharmavaan ஞான சூன்யம் துண்டு சீட்டு. ஏதோ எல்லாம் தெரிந்த மேதை போல் புத்திமதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X