அ.தி.மு.க., தேர்தலை எதிர்த்த 'மாஜி' எம்.பி., மனு தள்ளுபடி

Added : செப் 20, 2022 | |
Advertisement
சென்னை:அ.தி.மு.க., உள்கட்சி தேர்தலை எதிர்த்து, முன்னாள் எம்.பி., - கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த தேர்தலில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி.,யான

சென்னை:அ.தி.மு.க., உள்கட்சி தேர்தலை எதிர்த்து, முன்னாள் எம்.பி., - கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த தேர்தலில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி.,யான கே.சி.பழனிசாமி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர், உள்கட்சி விவகாரம் குறித்து தொடர முடியாது என்பதால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார்.
'கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து, முறைப்படி தகவல் தெரிவிக்கப்படவில்லை. நீக்கத்தை எதிர்த்த வழக்கு, டில்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது' என, கே.சி.பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.இதையடுத்து, உள்கட்சி தேர்தலை எதிர்த்த கே.சி.பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X