தாலுகா அலுவலகத்திற்குள் விவசாயி தீக்குளிக்க முயற்சி

Added : செப் 20, 2022 | |
Advertisement
வேப்பூர்:வேப்பூர் வருவாய் துறையை கண்டித்து, தாலுகா அலுவலகத்திற்குள் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.கடலுார் மாவட்டம் வேப்பூர் அடுத்த காட்டுமயிலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 40; விவசாயி. இவருக்கு சொந்தமாக 1.62 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், கிராம புல எண் பதிவில் 1.26 ஏக்கர் பரப்பு உள்ளதாக தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மறு அளவீடு செய்து மாற்றி
தாலுகா அலுவலகத்திற்குள் விவசாயி தீக்குளிக்க முயற்சி

வேப்பூர்:வேப்பூர் வருவாய் துறையை கண்டித்து, தாலுகா அலுவலகத்திற்குள் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம் வேப்பூர் அடுத்த காட்டுமயிலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 40; விவசாயி. இவருக்கு சொந்தமாக 1.62 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், கிராம புல எண் பதிவில் 1.26 ஏக்கர் பரப்பு உள்ளதாக தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மறு அளவீடு செய்து மாற்றி தரக் கோரி, கடந்த 2020ம் ஆண்டில், விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தார்.
பலமுறை நிலத்தை அளவீடு செய்ய வேப்பூர் வருவாய் துறைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை. ஆத்திரமடைந்த ராமலிங்கம், நேற்று முன்தினம் வேப்பூர் வருவாய் துறையை கண்டித்து, தாலுகா அலுவலகத்திற்குள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
அருகிலிருந்த வருவாய் அலுவலர்கள் அவரை தடுத்து, குளிக்க வைத்து மாற்று உடை வழங்கினர். பின், நேரில் வந்து நிலத்தை அளவீடு செய்து தருவதாக தாசில்தார் மோகன் உறுதி அளித்தார். இதையடுத்து, மதியம் 12:15 மணியளவில் ராமலிங்கம் புறப்பட்டு சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X