புகார் பெட்டி...: திருவள்ளூர்

Added : செப் 20, 2022 | |
Advertisement
கழிவுகள் அகற்றப்படுமா?திருத்தணி, காந்தி ரோடில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி எதிரிலும், ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையிலும் குப்பை மற்றும் கழிவுகள் சிலர் கொட்டிவிட்டு செல்கின்றனர்.இந்த குப்பையை நகராட்சி நிர்வகம் தினசரி எடுக்காததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால்
புகார் பெட்டி...: திருவள்ளூர்

கழிவுகள் அகற்றப்படுமா?

திருத்தணி, காந்தி ரோடில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி எதிரிலும், ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையிலும் குப்பை மற்றும் கழிவுகள் சிலர் கொட்டிவிட்டு செல்கின்றனர்.இந்த குப்பையை நகராட்சி நிர்வகம் தினசரி எடுக்காததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் ரயில் நிலையத்திற்கு நடந்தும், வாகனங்களில் செல்லும் பயணியர் சிரமப்படுகின்றனர்.இதுதவிர குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாய நிலை உள்ளதால், உடனடியாக அரசு பள்ளி எதிரில் உள்ள குப்பையை அகற்றி, வரும் காலத்தில் அங்கு குப்பை கொட்டாதவாறு நகராட்சி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்

.- அ. முனுசாமி, திருத்தணி.

குடிநீர் தொட்டி அருகே கழிவு நீர்திருவாலங்காடு ஒன்றியம், பாகசாலை ஊராட்சியில், முருகன் கோவில் எதிரே அமைந்துள்ளது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி.இதன் வாயிலாக கிராமத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே கழிவு நீர் தேங்கி உள்ளது.இதனால், கழிவு நீர், குடிநீருடன் கலந்து நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், அங்கு தேங்கும் கழிவு நீரை அகற்ற ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஏ.சக்திவேல், பாகசாலை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X