பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வு சட்டசபை குழு உறுதி| Dinamalar

'பார்க்கிங்' பிரச்னைக்கு தீர்வு சட்டசபை குழு உறுதி

Added : செப் 20, 2022 | |
ஊட்டி:'ஊட்டியில் தொடரும் 'பார்க்கிங்' பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்' என, சட்டசபை உறுதிமொழி குழுவினர் தெரிவித்தனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டியில், மாநில சட்டசபை உறுதிமொழி குழு தலைவர் உதயசூரியன் தலைமையில் ஆய்வு நடந்தது.ஊட்டி அரசு கலைக் கல்லுாரி, படகு இல்லம், எம்.பாலாடாவில் உள்ள பழங்குடியினர் பள்ளி என, ஏழு இடங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, ஊட்டி தமிழக
'பார்க்கிங்' பிரச்னைக்கு தீர்வு சட்டசபை குழு உறுதி

ஊட்டி:'ஊட்டியில் தொடரும் 'பார்க்கிங்' பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்' என, சட்டசபை உறுதிமொழி குழுவினர் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், மாநில சட்டசபை உறுதிமொழி குழு தலைவர் உதயசூரியன் தலைமையில் ஆய்வு நடந்தது.ஊட்டி அரசு கலைக் கல்லுாரி, படகு இல்லம், எம்.பாலாடாவில் உள்ள பழங்குடியினர் பள்ளி என, ஏழு இடங்களை ஆய்வு செய்தனர்.


தொடர்ந்து, ஊட்டி தமிழக விருந்தினர் மாளிகையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது.பின், குழு தலைவர் உதயசூரியன் நிருபர்களிடம் கூறுகையில்,''ஏழு இடங்கள் நேரடியாக ஆய்வு செய்தோம். 50 திட்டப் பணிகளில், 10 பணிகள் முடிந்துள்ளன. 33 பணிகள் நடந்து வரும் நிலையில், 7 பணிகள் குறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.


''ஊட்டியின் தொடரும், 'பார்க்கிங்' தள பிரச்னைக்கு விரைவில் தீர்வு ஏற்படுத்தப்படும். 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 'சில்ஹல்லா' மின் திட்ட ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. எம்.பாலாடாவில் உள்ள பழங்குடியினர் பள்ளி மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்துதர உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X