பழனிசாமி குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்| Dinamalar

பழனிசாமி குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

Added : செப் 20, 2022 | |
சென்னை:''தி.மு.க., ஆட்சியில் நான்கு முதல்வர்கள் இருப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசி உள்ளார். நான்கு முதல்வர்கள் அல்ல; யாரெல்லாம் நல்ல ஆலோசனைகளை எங்களுக்கு வழங்ககின்றனரோ, அவர்கள் அனைவரும் சேர்ந்து, இந்த ஆட்சியை நடத்துகின்றனர்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னையை அடுத்த மறைமலை நகரில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்

சென்னை:''தி.மு.க., ஆட்சியில் நான்கு முதல்வர்கள் இருப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசி உள்ளார்.

நான்கு முதல்வர்கள் அல்ல; யாரெல்லாம் நல்ல ஆலோசனைகளை எங்களுக்கு வழங்ககின்றனரோ, அவர்கள் அனைவரும் சேர்ந்து, இந்த ஆட்சியை நடத்துகின்றனர்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


சென்னையை அடுத்த மறைமலை நகரில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், நான்காவது மாநாடு நடந்தது. சங்கத் தலைவர் ஜான்சிராணி தலைமை வகித்தார்.முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:தி.மு.க., அரசு அமைந்ததும், பல்வேறு திட்டப் பணிகளை, 15 மாதங்களில் செய்துள்ளோம். மாற்றுத்திறனாளி களுக்காக மட்டும், 759 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


தங்கள் கையில் அதிகாரம் இருந்தபோது, நாட்டைப் பற்றியோ, நாட்டு மக்களைப் பற்றியோ கவலைப்படாதவர்கள், இன்றைக்கு இந்த ஆட்சியின் மீது, இட்டுக்கட்டிய கதைகளை எல்லாம், அவதுாறாக பரப்ப நினைக்கின்றனர்.இப்போது போடும் ஆர்ப்பாட்ட கோஷங்கள் எல்லாம் மக்களுக்கு தெரியாதா? மக்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனரா? எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும், நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கக் கூடியவர்கள்.


அதிகாரத்துக்கு வந்துவிட்ட காரணத்தால், விலகிச் செல்பவர்கள் அல்ல. உங்கள் கோரிக்கையை செயல்படுத்த தான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்.தி.மு.க., ஆட்சியில் ஏதோ நான்கு முதல்வர்கள் இருக்கின்றனர் என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி புதிதாக ஒன்றை கண்டுபிடித்து பேசுகிறார்.


நான்கு முதல்வர்கள் அல்ல; யாரெல்லாம் நல்ல ஆலோசனைகளை, எங்களுக்கு வழங்குகின்றனரோ, அவர்கள் அனைவரும் சேர்ந்து தான் இந்த ஆட்சியை நடத்துகின்றனர். அப்படிப்பட்ட ஆட்சி தான் தி.மு.க., ஆட்சி.மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்பட்டுள்ளன. இன்னும் பல கோரிக்கைகள் இருக்கிறது. நிதி ஆதாரங்களைப் பொறுத்து, அவை எல்லாம் உறுதியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.


அமைச்சர்கள் நேரு, அன்பரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X