ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவர் சிலம்பப் போட்டியில் சாதனை

Added : செப் 20, 2022 | |
Advertisement
திருவள்ளூர்:திருவள்ளூர், வேடங்கிநல்லுாரில் இயங்கி வரும் ஸ்ரீநிகேதன் பாடசாலை பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர் இம்மானுவேல், தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தார்.மார்சல் ஆர்ட்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா நடத்திய 3-வது தேசிய அளவிலான சிலம்பப் போட்டி, அம்பத்துாரில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக, வடசென்னை போலீஸ்
ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவர் சிலம்பப் போட்டியில் சாதனை

திருவள்ளூர்:திருவள்ளூர், வேடங்கிநல்லுாரில் இயங்கி வரும் ஸ்ரீநிகேதன் பாடசாலை பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர் இம்மானுவேல், தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தார்.

மார்சல் ஆர்ட்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா நடத்திய 3-வது தேசிய அளவிலான சிலம்பப் போட்டி, அம்பத்துாரில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக, வடசென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரம்யா பாரதி, போட்டியை துவக்கி வைத்தார்.மாநில துணைச் செயலர் சுதர்சன் முன்னிலையில் நடைபெற்ற இப்போட்டியில், பல்வேறு மாநிலங்களில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

இறுதிப் போட்டியில், தேசிய அளவில் முதல் பரிசு பெற்ற திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த ஸ்ரீநிகேதன் பாடசாலை பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் இம்மானுவேலை, பள்ளி தாளாளர் விஷ்ணு சரண், இயக்குனர்கள் பரணிதரன், அருளரசு, பள்ளி முதல்வர் கிரிஜா, துணை முதல்வர் ஹேமலதா, தலைமை ஆசிரியை ஜூலி பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X