முல்லை பெரியாறு நீர்மட்டம் விதிமுறையை மாற்றி நிர்ணயிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

Added : செப் 20, 2022 | |
Advertisement
கூடலுார்:முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் மழை இல்லாததால், நீர்மட்டம் 136 அடியாக குறைந்தது. 'ரூல் கர்வ்' விதிமுறையால் இன்று செப்., 20ல் எட்ட வேண்டிய 142 அடி நீர்மட்டம், கானல் நீரானது.மொத்தம் 152 அடி உயரம் கொண்ட முல்லை பெரியாறு அணையில் சில நாட்களாக நீர்ப் பிடிப்பு பகுதியில் மழையின்றி நீர்மட்டம் குறைந்து நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி 136.25 அடியாக இருந்தது.அணைக்கு நீர்வரத்து

கூடலுார்:முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் மழை இல்லாததால், நீர்மட்டம் 136 அடியாக குறைந்தது.
'ரூல் கர்வ்' விதிமுறையால் இன்று செப்., 20ல் எட்ட வேண்டிய 142 அடி நீர்மட்டம், கானல் நீரானது.மொத்தம் 152 அடி உயரம் கொண்ட முல்லை பெரியாறு அணையில் சில நாட்களாக நீர்ப் பிடிப்பு பகுதியில் மழையின்றி நீர்மட்டம் குறைந்து நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி 136.25 அடியாக இருந்தது.அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 675 கனஅடியாகும். தமிழகப்பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக 1,867 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 6,181 மில்லியன் கன அடியாகும்.வீணாக வெளியேறியது
அணையில் தண்ணீர் தேக்கப்படும் கால அட்டவணையான ரூல்கர்வ் விதிமுறைப்படி இன்று நவ., 20ல், 142 அடி தேக்கலாம். ஆனால் மழையின்றி நீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதே வேளை கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து ஆக., 9ல் அதிகபட்சமாக 139.55 அடியை எட்டியது.
தொடர்ந்து கன மழை பெய்ததால் ரூல்கர்வ் விதிமுறைப்படி கேரளப் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு அணை நீர்மட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.மொத்தம், 2 டி.எம்.சி., தண்ணீர் கேரளாவுக்கு வீணாக வெளியேறியது. இதனால், 142 அடியை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 152 அடியை கணக்கில் வைத்து ரூல்கர்வ் விதிமுறையை நிர்ணயிக்க மத்திய நீர் வளக் கமிஷன் முன் வர வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X