காஞ்சி, செங்கையில் கிடப்பில் உள்ள திட்டங்கள்...ரூ.260 கோடி!:நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை அலட்சியம்

Added : செப் 20, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், பொதுப்பணித் துறையில் 168 கோடி ரூபாய் மதிப்பிலும், நெடுஞ்சாலைத் துறை சார்பில், 92 கோடி ரூபாய் மதிப்பிலும் என, இரு துறைகளிலும், 260 கோடி ரூபாய் மதிப்பிலான, வளர்ச்சி திட்டங்கள் கிடப்பில் உள்ளன.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களும் ஒன்றாக இருந்தபோதே, பல்வேறு வளர்ச்சி பணிகள், மெதுவாகவே நடைபெற்று
காஞ்சி, செங்கையில் கிடப்பில் உள்ள திட்டங்கள்...ரூ.260 கோடி!:நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை அலட்சியம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், பொதுப்பணித் துறையில் 168 கோடி ரூபாய் மதிப்பிலும், நெடுஞ்சாலைத் துறை சார்பில், 92 கோடி ரூபாய் மதிப்பிலும் என, இரு துறைகளிலும், 260 கோடி ரூபாய் மதிப்பிலான, வளர்ச்சி திட்டங்கள் கிடப்பில் உள்ளன.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களும் ஒன்றாக இருந்தபோதே, பல்வேறு வளர்ச்சி பணிகள், மெதுவாகவே நடைபெற்று வந்தன.இந்நிலையில், 2019ம் ஆண்டில், மாவட்டம் பிரிக்கப்பட்ட நிலையில், நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித் துறைக்கான பணிகள் வேகமெடுக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த இரு துறையில் இருக்கும் பணிகள் அப்படியே கிடப்பில் உள்ளன.நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்தாண்டு ஆய்வு கூட்டம் நடத்தும்போது, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,கள் என மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு பிரச்னைகள் குறித்து தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.ஆனாலும், நிலுவையில் உள்ள வளர்ச்சி பணிகள் அடுத்த கட்டத்திற்கு சென்றதாக தெரியவில்லை.

நெடுஞ்சாலைத் துறையில் கிடப்பில் உள்ள பணிகள்:

* காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில், வனத்துறை பகுதிகளில், 26 சாலைகள் படு மோசமாக உள்ளன. வனத்துறையிடம் அனுமதி பெற்று சாலை அமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை தெரிவித்திருந்தது. ஆனால், வனத்துறை சாலைகள் இன்னமும் மோசமாகவே உள்ளன செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒட்டிவாக்கம் மேம்பாலத்திற்கு, 30.4 கோடி ரூபாயும், கருங்குழி ரயில்வே பாலத்திற்கு, 29.5 கோடி ரூபாயும், அச்சிறுபாக்கம் ரயில்வே பாலத்திற்கு 32.3 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டும் ரயில்வே மேம்பாலங்கள் பணி கிடப்பில் உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு நிர்வாக அனுமதி வழங்கிய நிலையில், 11 ஆண்டுகளாகியும் பணிகள் முடியாமல், அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்

*காஞ்சிபுரத்தில் இருந்து, செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கு பண்டிகை, திருவிழா காலங்களில் பேருந்துகளை திருப்பி விடும்போது, முத்தியால்பேட்டை வழியாக செல்வது வழக்கம்.அந்த சாலை மிக குறுகலாக உள்ளதால், வையாவூர் - முத்தியால்பேட்டை சாலையை விரிவுபடுத்த வேண்டும் என, தொடர் கோரிக்கை உள்ளது. ஆனால், அச்சாலை விரிவுபடுத்தும் பணியும் நடைபெறவில்லை.

பொதுப்பணித் துறையில் கிடப்பில் உள்ள பணிகள்:

*காரைப்பேட்டையில் தலைக்காயத்துக்காக அவசர சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ.,எழிலரசன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால், இன்றைய தேதி வரை, அவசர சிகிச்சை மையம் கட்டுவதற்கான எந்த அரசாணையும் வந்ததாக தெரியவில்லை

* உத்திரமேரூர் நீதிமன்ற கட்டடத்திற்கு, 12.26 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், நீதிமன்றம் கட்டுவதற்கான நிதி ஏதும் இதுவரை ஒதுக்கப்படவில்லை

* காஞ்சிபுரத்தில் 22 நீதிமன்றங்களுடன் அமைய, ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட, 152.06 கோடி ரூபாயில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், நிதி ஒதுக்கீடு இல்லாததால், இன்று வரை நீதிமன்றம் கட்டும் பணிகள் கிடப்பில் உள்ளன

* காஞ்சிபுரத்தில் 22 அரசு அலுவலகங்கள் தனியார் கட்டடத்திலும், செங்கல்பட்டில், 32 அலுவலகங்கள் தனியார் கட்டத்திலும் இயங்குகின்றன. ஒருங்கிணைந்த அரசு அலுவலகம் கட்டட மதிப்பீடு தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்தகட்ட நடவடிக்கை ஏதும் இன்றி கோப்புகள் கிடப்பிலேயே உள்ளன.

செய்யாறு பாலப் பணிகள்



வெங்கச்சேரியில், 2015ல், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட செய்யாறு பாலம் ஆறு ஆண்டுகளாக உடைந்த நிலையிலேயே இருந்தது. இப்பாலம் கட்ட ஆறு ஆண்டுகளாக நிதி ஒதுக்காத நிலையில், கடந்தாண்டு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கி தற்போது நடைபெறுகின்றன. செய்யாறு பாலம் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X