பி.டி.ஓ., அலுவலகத்தில் தர்ணா: உளுந்துார்பேட்டையில் பரபரப்பு

Added : செப் 20, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை பி.டி.ஓ., அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.உளுந்துார்பேட்டை தாலுகா, எம்.குன்னத்துார் ராசி மகன் ராஜேந்திரன், 40; கூலி தொழிலாளி. இவருக்கு பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கேட்டு விண்ணப்பித்திருந்தார்.அதன் பேரில், அமைச்சர் ஏ.வ. வேலு, கடந்த 2021 நவம்பர் 23ம் தேதி வீடு கட்டுவதற்காக 1.70 லட்சம்
பி.டி.ஓ., அலுவலகத்தில் தர்ணா: உளுந்துார்பேட்டையில் பரபரப்பு

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை பி.டி.ஓ., அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

உளுந்துார்பேட்டை தாலுகா, எம்.குன்னத்துார் ராசி மகன் ராஜேந்திரன், 40; கூலி தொழிலாளி. இவருக்கு பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கேட்டு விண்ணப்பித்திருந்தார்.அதன் பேரில், அமைச்சர் ஏ.வ. வேலு, கடந்த 2021 நவம்பர் 23ம் தேதி வீடு கட்டுவதற்காக 1.70 லட்சம் ரூபாய்க்கான உத்தரவு ஆணை ராஜேந்திரனிடம் வழங்கினார்.அந்த ஆணையில் பயனாளியின் பெயர் ராஜேந்திரன் என்பதற்கு பதில் ராமச்சந்திரன் எனவும், அவரது தந்தை பெயர் ராசி என்பதற்கு பதில் சாமிக்கண்ணு என, பெயர் மாற்றி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து முறையிட்டபோது அதிகாரிகளும், ஊராட்சி செயலாளர் ஏழுமலையும் திருத்தம் செய்து வீடு வழங்கப்படும் என உறுதி அளித்தியிருந்தனர்.இதனிடையே வீடு கட்டுவதற்காக உத்தரவு ஆணை வழங்கப்பட்டதால், குடியிருந்த வீட்டை இடித்துவிட்டு, புதிய வீடு கட்டுவதற்கான பணியில் ஈடுபட்டபோது அதற்கான தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.அதிருப்தியடைந்த ராஜேந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் அப்பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் நேற்று பகல் 12.15 மணியளவில் உளுந்துார்பேட்டை பி.டி.ஓ., அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் உளுந்துார்பேட்டை துணை பி.டி.ஓ., ஜெகதீசன் ஆகியோர் அவர்களை சமரசம் செய்து, வீடு கட்டுவதற்கான உத்தரவு ஆணையை திருத்தம் செய்து வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X