சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ராஜாவின் நாவை மக்கள் அடக்குவர்!

Added : செப் 20, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
ராஜாவின் நாவை மக்கள் அடக்குவர்! க.ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஹிந்துக்கள் விபச்சாரிகளின் மகன்கள்' என்று, நாக்கில் நரம்பில்லாமல் நெருப்பை கக்கியுள்ளார், தி.மு.க., - எம்.பி., - ஆ.ராஜா. பொது நிகழ்ச்சிகளில், ராஜா எப்போது பேசினாலும், மூன்றாம் தர அரசியல்வாதிகள், கூலிக்கு மாறடிக்கும் பேச்சாளர்கள் போன்றே,


ராஜாவின் நாவை மக்கள் அடக்குவர்!க.ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஹிந்துக்கள் விபச்சாரிகளின் மகன்கள்' என்று, நாக்கில் நரம்பில்லாமல் நெருப்பை கக்கியுள்ளார், தி.மு.க., - எம்.பி., - ஆ.ராஜா. பொது நிகழ்ச்சிகளில், ராஜா எப்போது பேசினாலும், மூன்றாம் தர அரசியல்வாதிகள், கூலிக்கு மாறடிக்கும் பேச்சாளர்கள் போன்றே, அநாகரிகமாக பேசுகிறார். பொறுப்பான பதவியில் இருப்பவர், இப்படி பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, தி.மு.க., ஆட்சி உள்ளது. முதல்வர் உட்பட, அமைச்சர்கள் பலர் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். அப்படிப்பட்ட நிலையில், ஹிந்துக்கள் விபச்சாரிகளின் மகன்கள் என்றால், அந்த வார்த்தை, முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து தி.மு.க.,வினரையும் சேர்த்து விமர்சிப்பது போன்றது தானே...
எனவே, ராஜாவின் பேச்சை கண்டு கொள்ளாமல், அவரை கண்டிக்காமல், முதல்வர் ஸ்டாலின் இருப்பது சரியல்ல. அப்படி இருந்தால், ஸ்டாலின் உத்தரவுப்படியே, ஹிந்துக்களுக்கு எதிராக ராஜா பேசுகிறார் என்ற தோற்றத்தை, மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விடும். ஹிந்து மதத்தை அடிக்கடி இழிவுபடுத்தி பேசி வரும் ராஜாவுக்கு, மூளைக்கோளாறு ஏற்பட்டு உள்ளதாகவே தெரிகிறது. அவரின் மனநிலையை பரிசோதிக்கவும் முதல்வர் உத்தரவிட வேண்டும். தேவைப்பட்டால், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை அளிக்கலாம்.
யாகாவராயினும் நாகாக்க வேண்டும். நாவை அடக்கவில்லை என்றால், அவரை சட்டமும், மக்களும் அடக்க வேண்டிய நிலை உருவாகும்... ஜாக்கிரதை!


துாக்கத்தில் தனிப்பிரிவுஅதிகாரிகள்!ஏ.சேனாதிபதி, கணியூர், திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை, முதல்வரின் தனிப்பிரிவுக்கு, முன்னர் தபால் வழியாக அனுப்பினால், தாமதமானாலும் நடவடிக்கை வரும் என்ற நம்பிக்கை இருந்தது. அதன்பின், இணையம் வழியாக மனுக்களை அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதிலும் ஓரளவுக்கு நடவடிக்கை இருந்தது. புகார் எந்த துறை தொடர்பானது என்று குறிப்பிட்டால் மட்டும் போதும்... அந்த துறை அதிகாரிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது முதல்வரின் முகவரி துறை, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' என, கவர்ச்சிகரமாக உள்ளதே தவிர, உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் இல்லை. முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தில், பொதுமக்கள் எந்த துறைக்கு புகாரை அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, யார் யாருக்கு, எந்தப் புகாரை அனுப்ப வேண்டும் என்ற விபரம் முழுமையாக இல்லை. உதாரணமாக, பேரூராட்சி தொடர்பான புகார் அனுப்பினால், அதன் நடவடிக்கை அலுவலராக பேரூராட்சி செயல் அலுவலர் இருப்பார். அதே நேரத்தில், செயல் அலுவலர் மீது புகார் அளிக்க வேண்டும் என்றால், யாருக்கு அனுப்ப வேண்டும் என்பது போன்ற பல சந்தேகங்களுக்கு வழிகாட்டுதல் இல்லை. அத்துடன், காவல் துறை சார்ந்த புகார்களுக்கு என தனியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. அத்துறை தொடர்பான புகார்களை இணைய வழியாக அனுப்பவும் முடியவில்லை. மேலும், இணையத்தின் வாயிலாக புகார்கள் அனுப்பும் போது, அவற்றை சில அலுவலர்கள் வேண்டுமென்றே நிராகரித்து விடுகின்றனர்; அதற்கான காரணத்தை குறிப்பிடுவதில்லை. முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தில், புகார் எண்ணை பதிவு செய்து பார்த்தால், நிராகரிப்பிற்கான காரணம் தெரியும் என்றனர். அதிலும், ஒரு சில மனுக்களை தவிர, மற்றவற்றுக்கான காரணம் குறிப்பிடப்படுவதில்லை. சரி, புகார் மனுவின் மீது நடவடிக்கை இல்லை என்று, அதில் குறிப்பிட்டு உள்ளபடி மேல்முறையீடு செய்தாலும், அதற்கும் உரிய பதில் இல்லை; நடவடிக்கையும் இல்லை.
முதல்வரின் தனிப்பிரிவுக்கு என்று ஒரு துறை, அதற்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி இருந்தாலும், இந்த துறையின் செயல்பாடுகள் மிகவும் மட்ட ரகமாகவும், சுணக்கமாகவும் இருக்கின்றன.முதல்வரின் தனிப்பிரிவுக்கு எழுதிய மனு மீதே நடவடிக்கை இல்லை என்றால், இனி யாரிடம் போய் முறையிடுவது என்ற சலிப்பு மட்டுமே சாமானிய மக்களிடம் மிஞ்சியுள்ளது. முதல்வரின் தனிப்பிரிவு துறை அதிகாரிகள் தயவு செய்து, துாக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும்.


தைலாபுரம் தோட்டம்காத்தாடும்!என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியலில் கட்சி தாவுவது வழக்கமான விஷயமே. அதாவது, கீழ் மட்டத்தில் உள்ள நிர்வாகிகள் மட்டுமின்றி, எம்.எல்.ஏ., - எம்.பி., பதவி வகிப்போரும், கட்சி மாறுவது அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வு. கட்சி மேலிடத்தின் மீதோ, நிர்வாகிகள் மீதோ உள்ள அதிருப்தியும், உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாததும், இந்த கட்சி தாவலுக்கு
காரணமாக இருக்கலாம். ஆனால், ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து மாற்று கட்சிக்கு செல்வோரை, இறந்து விட்டதாக, கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் தயாரித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதாக தகவல் பரவியுள்ளது. இந்த வேலையை சந்தோஷமாக செய்து வருவோர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியிலிருந்து ஓடுவோருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் என்றால், பிற கட்சிகளிலிருந்து பா.ம.க.,வுக்கு வருவோரை, 'பிணங்களே... வருக... வருக...' என்று சொல்லி, வரவேற்பரா என்று தெரியவில்லை. பல ஆண்டுகளாக, ஜாதியை முன்னிலைப்படுத்தி நடத்திய அரசியலால், பா.ம.க.,வின் ஓட்டு வங்கி வெகுவாக குறைந்து விட்டது; ஆனாலும், அந்தக் கட்சியின் இப்போதைய தலைவர், முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுகிறார். அந்தப் பதவியில் அமர வேண்டும் என்பதற்காக, பகீரதப் பிரயத்தனமும் செய்து வருகிறார். அதேநேரத்தில், இன்று உலக நடப்பை கைக்குள் வைத்திருக்கும் இளைஞர்களை ஏமாற்றுவது கடினமான விஷயம். இதை, பா.ம.க., தலைவரும், நிர்வாகிகளும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. அரசியலில் வளர்ச்சி, வீழ்ச்சி என்பதெல்லாம் சகஜமே... அதற்காக கட்சியை விட்டு வெளியேறுவோருக்கு எதிராக, கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வெளியிட்டு, வேதனைப்படுத்துவது சர்வாதிகாரத்தின் உச்சம். கட்சி உறுப்பினர்கள் ஒன்றும் கொத்தடிமைகள் இல்லையே? வீழ்வதும், வாழ்வதும் தலைவன் கையில் தான் உள்ளது. தலைவன் தலைவனாக இருந்தால், தொண்டன் நல்ல விசுவாசியாக இருப்பான்; பசுமையான இடம் தேடி ஓடமாட்டான். பா.ம.க., தலைமை மீதுள்ள அதிருப்தியே, அக்கட்சியை சலசலக்க வைக்கிறது. கட்சியின் பலவீனத்தை போக்க நடவடிக்கை எடுக்காமல், முரண்பாடான செயல்களில் ஈடுபட்டால், தைலாபுரம் தோட்டம் கட்சியினர் நடமாட்டமின்றி காத்தாடும் என்பதை, சம்பந்தப்பட் டோர் உணர வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gopalasamy N - CHENNAI,இந்தியா
21-செப்-202221:36:49 IST Report Abuse
gopalasamy N முதல்வர் குறை தீர்க்கும் பிரிவினால் எந்த பய ணும் இல்லை ஒரு கோரிக்கை மனு மீது பத்து ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை அனால் நடவடிக்கை எடுக்க பட்டதாக பதில் அனுப்பி விட்டு நிராகரிக்க படுகிறது முதல்வர் ஏமாத்த படுகிறார்
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
21-செப்-202215:46:11 IST Report Abuse
Anantharaman Srinivasan நாவை அடக்கவில்லை என்றால், நாக்கை அடக்க வேண்டிய நிலையை சட்டமும், மக்களும் எடுப்பர்...
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
21-செப்-202208:48:33 IST Report Abuse
J. G. Muthuraj ஆ. ராசா பேசிய கருத்துக்கு எதிர் விளக்கம் கொடுக்கமுடியாம ஏன் வேற்று மதத்தான் மேல வயித்தெரிச்சல கொட்டுறீங்க?....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X