பறிமுதல் செய்த 'பிளாஸ்டிக்' பொருட்கள் மறு பயன்பாடிற்கு இயந்திரத்தில் அரைப்பு

Added : செப் 20, 2022 | |
Advertisement
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து, பிளாஸ்டிக் பொருட்களை, பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. பறிமுதல் பிளாஸ்டிக் பொருட்கள், மலை போல் குவிந்து வருவதால், அதை கையாள்வதில் கடும் சவாலை சந்தித்து வந்தனர்.இதையடுத்து, சேகரமாகும் பிளாஸ்டிக் பொருட்களை, மறு பயன்பாட்டிற்காக
பறிமுதல் செய்த 'பிளாஸ்டிக்' பொருட்கள் மறு பயன்பாடிற்கு இயந்திரத்தில் அரைப்பு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து, பிளாஸ்டிக் பொருட்களை, பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
பறிமுதல் பிளாஸ்டிக் பொருட்கள், மலை போல் குவிந்து வருவதால், அதை கையாள்வதில் கடும் சவாலை சந்தித்து வந்தனர்.இதையடுத்து, சேகரமாகும் பிளாஸ்டிக் பொருட்களை, மறு பயன்பாட்டிற்காக 'பிளாஸ்டிக் கிரைண்டிங்' இயந்திரத்தில் அரைப்பது என முடிவு செய்தனர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகம் அருகே, தனி அறையில் அந்த இயந்திரத்தை வைத்துள்ளனர். பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பொருட்களை, அதனுள் செலுத்துக்கின்றனர். நன்கு அரைக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், முடிவில் கீழே உள்ள தொட்டி ஒன்றில், துாள்களாக சேகரமாகிறது.
அப்படி சேகராகும் பிளாஸ்டிக் துாள்களை, மூட்டைகளாக கட்டி வைக்கின்றனர். பின், சாலை பணிகளுக்கு அந்த பிளாஸ்டிக் துாள்களை விற்பனை செய்கின்றனர்.இது குறித்து சம்பந்தப் பட்ட பேரூராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'பிளாஸ்டிக் துாள்களை, சாலை பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். 1 கிலோ பிளாஸ்டிக் துாள்கள், 3 - 5 ரூபாய் வரை விற்பனையாகிறது' என, தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X