லோக்கல் பஸ்... எக்ஸ்பிரஸ் கட்டணம்...ராமேஸ்வரம் டூ நாகூர் பயணிகள் எரிச்சல்

Added : செப் 20, 2022 | |
Advertisement
ராமநாதபுரம் : ராமேஸ்வரத்தில் இருந்து நாகூர் செல்லும் எக்ஸ்பிரஸ் பஸ் கடந்த சில மாதங்களாக அதே எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் லோக்கல் பஸ்சாக இயக்கப்படுவதால் பயணிகள் பாதிக்கப்படுவதோடு, காலை பீக் அவரில் உரிய நேரத்தில் சென்றடையாததால் பயணிகள் எரிச்சல் அடைகின்றனர். கும்பகோணம் போக்குவரத்து மண்டலம் பட்டுக்கோட்டை டிப்போவில் இருந்து எக்ஸ்பிரஸ் பஸ் பட்டுக்கோட்டையில் இருந்து

ராமநாதபுரம் : ராமேஸ்வரத்தில் இருந்து நாகூர் செல்லும் எக்ஸ்பிரஸ் பஸ் கடந்த சில மாதங்களாக அதே எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் லோக்கல் பஸ்சாக இயக்கப்படுவதால் பயணிகள் பாதிக்கப்படுவதோடு, காலை பீக் அவரில் உரிய நேரத்தில் சென்றடையாததால் பயணிகள் எரிச்சல் அடைகின்றனர்.

கும்பகோணம் போக்குவரத்து மண்டலம் பட்டுக்கோட்டை டிப்போவில் இருந்து எக்ஸ்பிரஸ் பஸ் பட்டுக்கோட்டையில் இருந்து ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கும், ராமேஸ்வரத்தில்இருந்து நாகூருக்கும் இயக்கப்படுகிறது. தினமும் அதிகாலை 5:20 மணிக்கு பட்டுக்கோட்டையில் புறப்பட்டு கோட்டைபட்டினம், தொண்டி, திருப்பாலைக்குடி, தேவிப்பட்டினம் வழியாக ராமநாதபுரத்திற்கு சரியாக 9:00 மணிக்கு வந்து விடும்.

இதனால் காலை பீக் அவரில் இந்த பஸ்சை எதிர்பார்த்து வாடிக்கையாக வரும் பயணிகள் கூட்டம் அதிகம். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள்,அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் இந்த பஸ்சில் வாடிக்கையாக வருவதால் தனியார் பஸ்சிற்கு சவால் விடும் வகையில் கூட்டம் அதிகம் காணப்படும். கலெக்க்ஷனும் அதிகம்.

மறு மார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11:55க்கு புறப்பட்டு ராமநாதபுரம், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் வழியாக நாகூருக்கு இரவு 9:00 மணிக்கு சென்றடைகிறது. நாகூரில் இருந்து இரவு 9:15க்கு புறப்பட்டு நள்ளிரவு 12:30க்கு பட்டுக்கோட்டை வந்தடையும். இதன்படி இந்த பஸ்சின் ஒருநாள் கலெக்க்ஷன் சராசரியாக 27 ஆயிரம் முதல் 28 ஆயிரம் ரூபாய்.


நெருக்கடியான இருக்கைகள்


கடந்த சில மாதங்களாக இந்த ஊதா நிற எக்ஸ்பிரஸ் பஸ்சிற்கு பதில் பழைய பச்சை நிற பஸ் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. ஆனால், எக்ஸ்பிரஸ் பயண கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முன்பு காலை 9:00 மணிக்கு ராமநாதபுரம் வந்த நிலையில் தற்போது 9:50 மணிக்கு மேலும் தாமதமாகிறது. இதனால் வாடிக்கையாக இந்த பஸ்சில் வரும் பயணிகள் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.

எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலித்துவிட்டு லோக்கல் பஸ் போல இயக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.மேலும், ராமேஸ்வரத்தில் இருந்து நாகூர் வரை நீண்ட தூர பயணமாக 310 கி.மீ., செல்லும் நிலையில், இருக்கை வசதி கூட சரியில்லாத சாதாரணபஸ்சில் எக்ஸ்பிரஸ் கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. நெருக்கடியான இருக்கைகளுடன் நீண்ட தூரத்திற்கு சற்று வசதியாக அமர்ந்து செல்ல முடியாத நிலை உள்ளது.


தனியார் பஸ்களுக்குசாதகமா...


அரசு பஸ் காலை நேரம் தாமதமாக வருவதால்ரெகுலர் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் குறிப்பிட்ட நேரத்தில் இந்த வழித்தடத்தில் தனியார் பஸ்களின் ஆதிக்கம் மீண்டும் தலை தூக்கியுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கு பயணிகள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை, என பயணிகள் புலம்பினர்.

ஒரு வேளை தனியார் பஸ் நிர்வாகத்திற்கு சாதகமாக இது போல் அதிக வசூலாகும் வழித்தடத்தில் பஸ்சை மாற்றி விட்டனரோ, என்றும் சில பயணிகள் சந்தேகம் தெரிவித்தனர். எது எப்படியோ மீண்டும்ஊதா நிற எக்ஸ்பிரஸ் பஸ்இயக்கப்பட வேண்டும்என்பது பயணிகள் கோரிக்கையாக உள்ளது. பட்டுக்கோட்டை டிப்போ நிர்வாகம் சரிசெய்யுமா...


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X