பாதாள சாக்கடையில் பரிதவிக்கும் 1வது வார்டு மக்கள்

Added : செப் 20, 2022 | |
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி 1வது வார்டு நகரின் முக்கியவீதிகளை உள்ளடக்கியது. சிவன் கோயில், பெருமாள் கோயில் உள்ளிட்ட பல முக்கிய தனியார் மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த வார்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் மிகவும் பின்தங்கியுள்ளது. சிவன் கோயில் வடக்குதெரு, தெற்குத் தெரு, மேற்கு அக்ரஹாரம், புது அக்ரஹாரம், கோட்டை மேட்டு தெருக்களை கொண்டது.
பாதாள சாக்கடையில் பரிதவிக்கும் 1வது வார்டு மக்கள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி 1வது வார்டு நகரின் முக்கியவீதிகளை உள்ளடக்கியது. சிவன் கோயில், பெருமாள் கோயில் உள்ளிட்ட பல முக்கிய தனியார் மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த வார்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் மிகவும் பின்தங்கியுள்ளது.

சிவன் கோயில் வடக்குதெரு, தெற்குத் தெரு, மேற்கு அக்ரஹாரம், புது அக்ரஹாரம், கோட்டை மேட்டு தெருக்களை கொண்டது. இதில் கோட்டைமேட்டுத் தெரு மட்டும் 4 குறுக்கு தெருக்களை உள்ளடக்கியுள்ளது. 2000 பேர் மக்கள் தொகையுள்ள இங்கு 1200 வாக்காளர்கள் உள்ளனர்.வார்டுக்குள் நுழைந்த போதே பிரதான பிரச்னை தெரிய வந்து விட்டது. ஒரு தெருவில் இருந்து அடுத்த தெருவுக்கு செல்லும் குறுக்கு சாலையில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் முற்றிலுமாக வெளியேறி சாலையின் குறுக்கே தேங்கி கிடந்தது.

இதனால் சாலையை கடந்து அடுத்த தெருவுக்குசெல்வதே கேள்விக் குறியான நிலையில் அந்த தெருவில் வசிப்போரின் நிலையோ பரிதாபமாக இருந்தது. வீட்டு வாசலை விட்டு வெளியே அடியெடுத்து வைக்கும் போதே கழிவு நீரோடையை தாண்டி குதித்து சாகசங்கள் செய்துதான் கடந்து செல்ல வேண்டி இருந்தது.கலெக்டரிடம் புகார் அளித்தும் எதுவும் நடக்கல..ராஜாவனம், சுயதொழில் முனைவோர்: வீடுகளை இணைக்கும் பாதாள சாக்கடையின் ஜங்சன் பாய்ன்ட்டுகளில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறுகிறது. நகராட்சி நிர்வாகத்திற்கு பல முறை புகார் அளித்தும்இதுவரை எந்த அதிகாரிகளும் வந்து எட்டிக் கூட பார்க்கவில்லை. வேறு வழியின்றி கலெக்டரிடம் புகார் அளித்தோம். எதுவும் நடக்கல. இதனால்பெரும் சுகாதார சீர்கேட்டில் வாழ்கிறோம்.சிவன் கோயில் தெருவுக்குக்கு பின்புற மெயின் ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது.

2294 ச.மீ., பரப்பளவு கொண்ட பூங்காவை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டதுடன் நகராட்சி நிர்வாகத்தின் பணி முடிந்தது. பூங்காவிற்கான அடையாளங்கள் ஏதுமின்றி குவிந்து கிடக்கும் குப்பை, அதில் உலா வரும் பன்றிகளும் திரிகின்றனர. மேற்கு அக்ரஹாரம், புது அக்ரஹாரம் தெருக்களில் குப்பை சரிவர அள்ளப்படாமல் ஆங்காங்கே மலை போல் குவிந்து கிடக்கிறது. இதில் பன்றிகள் கூட்டமாக சுற்றிதிரிகின்றன. நகராட்சி நிர்வாகம் யாருக்கோ...என்னவோ... என தனக்கு சிறிதும் சம்பந்தமே இல்லாதது போல் உள்ளது.



இதோட வாழக்கத்துக்கோங்க...


சசிரேகா, கோட்டைமேட்டு தெரு: நகராட்சி நிர்வாகத்தின் அழுத்தத்தால் பாதாள சாக்கடை திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்து பணம் செலவழித்தோம். ஆனால் தற்போது நடந்தது வேறு. பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு நான்கு வீட்டு கழிவு நீரும் ஒட்டு மொத்தமாக முன்புறம்தேங்கியுள்ளது. இந்த கழிவு நீரில் கொசுக்கள் பெருமளவில் உற்பத்தியாகின்றன.சுவாசிக்கவே முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் அடிக்கடி காய்ச்சல், இருமல், தலைவலி ஏற்படுகிறது. மூன்றாண்டுகளுக்கும் மேலாக நாங்கள் வீட்டிற்கும், நகராட்சி அலுவலகத்திற்கும் நடையாய் நடந்ததுதான் மிச்சம். இப்போதெல்லாம் இதுபற்றி புகார் தெரிவித்தால் ''இதோட வாழ கத்துக்கோங்க'' என்று கேசுவலாக கூறுகின்றனர் என்றார் வருத்தத்துடன்.


நிரந்தர தீர்வு காணப்படும்


முனீஸ்வரி, வார்டு கவுன்சிலர்: 1வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் முனீஸ்வரியிடம் வார்டு பிரச்னைகள் மற்றும் மக்களின் புகார் குறித்து கேட்ட போது, பூங்கா குறித்து மன்ற கூட்டத்தில் பேசியுள்ளோம். பாதாள சாக்கடை உடைப்பு மற்றும் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் கலந்து பேசி நிரந்தர தீர்வு காணப்படும்.இதுநாள் வரை நகராட்சியில் இருந்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மழைக்காலம் துவங்கும் முன் இதுபோன்ற பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X